News May 26, 2024

அரசியல் நோக்கத்திற்காக உதவி செய்யவில்லை

image

அரசியலுக்கு வர வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான் எந்த உதவிகளையும் செய்யவில்லை என ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். கஷ்டப்படுபவர்களுக்கு எந்த சுயநல நோக்கமும் இன்றி உதவி செய்து வருவதாக கூறிய அவர், தன்னைப் பார்த்து மற்றவர்களுக்கு உதவி செய்ய முன் வருவார்கள் என்ற நோக்கத்திற்காகவே வெளியில் தெரியும் படி உதவுவதாக தெரிவித்தார். மாற்றம் என்ற அமைப்பின் மூலம், ஏழை மக்களுக்கு லாரன்ஸ் உதவி செய்து வருகிறார்.

Similar News

News March 6, 2026

விஜய்- த்ரிஷா.. மோசமாக விமர்சித்த நடிகை!

image

திருமண நிகழ்ச்சிக்கு த்ரிஷாவுடன் விஜய் ஒன்றாக வந்ததை நடிகை சனம் ஷெட்டி விமர்சித்துள்ளார். ‘இது சரியானது இல்லை. மனைவியின் துயரத்தை புறக்கணிக்க முடியாது, கூடாது; நீண்ட கால ரசிகையாக இந்த நேரத்தில் தான் மிகவும் ஏமாற்றமடைவதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். முன்னதாக, விஜய் மீது பல விஷயங்களில் விமர்சனங்கள் எழுந்தபோது அவருக்கு சனம் ஷெட்டி அவருக்கு ஆதரவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 6, 2026

பெண்களின் Safety-க்காக போனில் இருக்கும் 2 ட்ரிக்ஸ்!

image

✱Setting-ல் ‘Emergency SOS’ ஆப்ஷனை ஆன் செய்யுங்க. உறவினர் or நண்பரின் Contact-டை Save பண்ணுங்க. போனின் பவர் பட்டனை 3 முறை அழுத்தினால், உங்க Live location போலீஸ் கன்ட்ரோல் ரூம் & Emergency Contact-க்கு மெசேஜ் சென்றுவிடும் ✱India 112 ஆப்- எந்த ஆபத்தாக இருந்தாலும் சரி, இந்த ஆப்பில் ஒரு கிளிக் செய்தால் போதும், 5- 10 நிமிடங்களில் போலீஸ் உதவ வந்துவிடும். இந்த பதிவை அனைத்து பெண்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 6, 2026

BREAKING: விலை ஒரேநாளில் அதிரடியாக குறைந்தது

image

தக்காளி, வெங்காயம் விலை ஒரேநாளில் அதிரடியாக குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சந்தைகளில் 1 கிலோ தக்காளி ₹6 – ₹8 வரையிலும், பெரிய வெங்காயம் 1 கிலோ ₹12 – ₹15 வரையில் விற்பனையாகிறது. இதனால் சில்லறை கடைகளில் தக்காளி ₹10 வரையிலும், வெங்காயம் ₹15 – ₹18 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

error: Content is protected !!