News May 26, 2024

தமிழ்நாட்டில் அரசியல் திருப்பம் ஏற்படும்: எல்.முருகன்

image

மக்களவைத் தேர்தலில் இதுவரை நடைபெற்ற வாக்குப்பதிவில், 310 இடங்களில் பாஜக வெற்றிபெறும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பாஜக மொத்தமாக 400 இடங்களில் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், காங்கிரஸ் கட்சிக்கு 40 இடங்களில் கூட கிடைக்காது என்றார். தமிழ்நாட்டில் இந்த முறை யாரும் எதிர்பாராத அரசியல் திருப்பத்தை தேர்தல் முடிவில் எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவித்தார்.

Similar News

News March 4, 2026

இந்தி திணிப்பு புளித்துப் போன காமெடி: அண்ணாமலை

image

இந்தி திணிப்புக்கு <<19295250>>CM ஸ்டாலின்<<>> தெரிவித்த கண்டனத்துக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். திமுக அரசுக்கு எதிர்ப்பு எழும்போது, பழைய தகரப் பெட்டியைத் திறந்து இந்தித் திணிப்பை எடுத்துக் காட்டு என்று உங்கள் தந்தை சொல்லிவிட்டுச் சென்றாரா என அவர் சாடியுள்ளார். புளித்துப்போன இந்தித் திணிப்பு காமெடி பண்ணாமல், உண்மையான மக்கள் பிரச்சினைகள் குறித்து எப்போது பேசுவீர்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News March 4, 2026

1,000 ஆண்டுகளாக பெண்களை அனுமதிக்காத விசித்திர நகரம்!

image

இக்காலத்திலும் இப்படி ஒரு இடமா என அதிர்ச்சியுடன் கேட்கும் அளவிற்கு உள்ள இடம் தான் மவுண்ட் ஏத்தஸ். கீரிஸில் உள்ள இத்தீபகற்பத்தில் கடந்த 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்களுக்கு அனுமதி கிடையாதாம். ஏன் பெண் விலங்குகளுக்கு கூட அங்கு தடை உள்ளது. கிழக்கு மரபுவழி கிறிஸ்துவத்தின் மிக முக்கியமான ஆன்மிக மையமாக கருதப்படும் இப்பகுதி யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

News March 4, 2026

சமையலால் மாமியாருடன் சண்டை.. மருமகள் தற்கொலை

image

பெங்களூருவை சேர்ந்த சுஷ்மா(35) புனித் தம்பதிக்கு 4 வயது மகன் உள்ளார். சுஷ்மாவிற்கும் மாமியாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று சமையல் செய்வது தொடர்பாக மாமியாருடன் சண்டை ஏற்பட, மனமுடைந்த சுஷ்மா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். வரதட்சணைக்காக அவரை கொடுமைப்படுத்தியதாக பெண் வீட்டார் குற்றம்சாட்ட, தற்போது புனித் கைது செய்யப்பட்டுள்ளார். மாமியார் தலைமறைவாகியுள்ளார்.

error: Content is protected !!