News May 26, 2024

அடுத்த பாஜக ஆட்சியில் பொது சிவில் சட்டம்: அமித் ஷா

image

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன் “பொதுசிவில் சட்டம்”அமல்படுத்தப்படும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். பொது சிவில் சட்டம் என்பது சமூக, சட்ட மற்றும் மதத்தின் அடிப்படையிலான மிகப்பெரிய சீர்திருத்தம் என்ற அவர், அதை அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் படிப்படியாக அமல்படுத்துவோம் என்றார். “ஒரேநாடு ஒரே தேர்தல்” முறையை அமல்படுத்தவும் அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்வோம் எனக் கூறினார்.

Similar News

News March 10, 2026

இந்த கணக்குகளில் 0 பேலன்ஸ் இருந்தாலும் அபராதம் இல்லை!

image

PMJDY உள்பட 72 கோடி அடிப்படை சேமிப்பு வங்கி கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்பு தொகை தேவையில்லை என்று நிர்மலா சீதாராமன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த கணக்குகளைப் பராமரிக்காததற்கு அபராதம் விதிக்கப்படாது, மேலும் வைப்புத்தொகை, பணம் எடுப்பது மற்றும் ஏடிஎம் சேவைகளுக்கும் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது; வங்கிச் சேவைகளை எளிதாக அணுகும் வகையில் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

News March 10, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶மார்ச் 10, மாசி 26 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: சப்தமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்

News March 10, 2026

விஜய்க்கு ரெண்டரை வருஷம் CM ஆஃபரை வீசும் பாஜக?

image

திமுக – காங்கிரஸ் உறுதியாகிவிட்ட நிலையில் தனித்து களம் காணும் மோடில் விஜய் இருக்கிறார். ஆனால் எப்படியாவது விஜய்யை NDA கூட்டணிக்குள் கொண்டுவர அமித் ஷா, பவன் கல்யாண் மூலம் பேசி வருகிறாராம். அதன்படி நடந்த பேச்சுவார்த்தையில் தான், கூட்டணிக்குள் வந்தால் நீங்க தான் ரெண்டரை வருஷம் CM என்ற ஆஃபரை பவன் கல்யாண் அளித்துள்ளாராம். ஆனால் அதற்கு தலையசைக்காத விஜய், பனையூரில் ஆலோசனையில் இறங்கியுள்ளாராம்.

error: Content is protected !!