News May 26, 2024

பப்புவா நியூ கினியா பயங்கர நிலச்சரிவில் 670 பேர் பலி

image

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 670க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தெற்கு பசுபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் கடந்த வெள்ளிக் கிழமை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழையால், அதிகாலை 3 மணிக்கு நிகழ்ந்த இந்த சம்பவத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மண்ணில் புதைந்தனர். மீட்புப் பணிகள் நடந்து வருவதாக ஐ.நா. அமைப்பு கூறியுள்ளது.

Similar News

News March 21, 2026

மரண பயத்தில் மனைவியை காதலனுடன் அனுப்பிய கணவர்

image

உ.பி., புலந்த்ஷரை சேர்ந்த ராஜ்குமாரின் மனைவிக்கு இன்னொருவருடன் தொடர்பு இருந்துள்ளது. இந்நிலையில், தன் மனைவியின் போனில் <<15809593>>புளூ டிரம்<<>> தொடர்பான ஸ்கிரீன் ஷார்ட்களை பார்த்த அவர், உடனே போலீஸுக்கு சென்று, ‘என் மனைவியின் போனில் இதெல்லாம் இருக்கு. அவ என்னை கொல்ல திட்டமிட்டிருக்கா… தயவுசெஞ்சு எங்கள பிரிச்சு விட்டுடுங்க…’ என கெஞ்ச, போலீஸும் பஞ்சாயத்து பேசி மனைவியை காதலனுடன் அனுப்பி வைத்தனராம்.

News March 21, 2026

பட்டியலே வெளியாகல.. வாக்கு வேட்டையில் செங்கோட்டையன்

image

இன்னும் வேட்பாளர் நேர்காணலையே தவெக முடிக்காத முன்பே, செங்கோட்டையன் தனக்கு வாக்களிக்குமாறு கோபி தொகுதியில் பிரசாரத்தை தொடங்கிவிட்டார். கோபியில் தொடர்ந்து 10-வது முறையாக போட்டியிடும் தனக்கு ஆதரவளிக்க வேண்டும் என வணிகர் சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகளிடம் அவர் ஆதரவு திரட்டி வருகிறார். அவருக்கு ஆதரவாக தவெகவின் சத்தியபாமாவும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

News March 21, 2026

நடிகர் அஜித் திடீர் முடிவு.. ரசிகர்கள் அதிர்ச்சி

image

நடிகர் அஜித்தின் புதிய முடிவு, அவரது ரசிகர்களை கலக்கமடைய செய்துள்ளது. ‘அஜித் குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ் LLC’ என்ற பெயரில் பிலிம் சேம்பரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தை அவர் பதிவு செய்துள்ளார். அஜித் தயாரிப்பாளர் ஆகிவிட்டால், இனி படங்களில் நடிக்க மாட்டாரா என்ற கேள்வி எழுந்திருப்பதே ரசிகர்களின் கலக்கத்திற்கு காரணம். தற்போதுவரை அஜித்தின் புதிய பட அறிவிப்பு வெளியாகாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!