News May 26, 2024
வழி தவறிய குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு
கரூரில் தனியார் திருமண சேவை மையம் நடத்தி வரும் சரவணன்-மோனிகா தம்பதியரின் 2 வயது குழந்தை பெரிஸ் பிளாசா வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். இதில் குழந்தை தனியாக கோவை சாலையில் வந்ததை கண்ட போக்குவரத்து காவலர்கள் மீட்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது குழந்தையை தேடிக் கொண்டிருந்த அவர்களை மகளிர் காவல் நிலையத்துக்கு வரவழைத்து அறிவுரை வழங்கி குழந்தையை பெற்றோரிடம் நேற்று ஒப்படைத்தனர்.
Similar News
News November 20, 2024
கால்வாயில் விழுந்து குழந்தை உயிரிழப்பு
கரூர் மாயனூர் அருகே தண்ணீர் பாலம் பகுதியை சேர்ந்தவர் கணபதி. இவர் மாயனூர் இரட்டை வாய்க்கால் அருகே குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று அவரது ஒன்றரை வயது குழந்தை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது வாய்க்காலில் தவறி விழுந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து அருகில் இருந்த பொதுமக்கள் வாய்க்காலில் இறங்கி தேடி குழந்தையை சடலமாக மீட்டனர்.
News November 20, 2024
தமிழக அளவில் முதலிடம் பிடித்த மாணவன்
கரூர் மாநகராட்சியில் உள்ள சிஎஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவன் ஹரிஹரன், மல்யுத்த போட்டியில் 100 கிலோ பிரிவில் தமிழ்நாடு அளவில் முதல் இடத்தைப் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்நிலையில் இன்று பள்ளி தலைமையாசிரியரிடம் சான்றிதழ் காண்பித்து பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பெற்றார். உடன் விளையாட்டு ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
News November 20, 2024
மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு
குளித்தலை அருகே நங்கவரத்தை அடுத்துள்ள தமிழ்சோலையை சேர்ந்தவர் மதன்குமார். இவரது மகன் ரோகித் ஷர்மா(6). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள ஆழ்துளை குடிநீர் குழாயை பிடித்து விளையாடிக் கொண்டு இருந்தார் அப்போது. மின்சாரம் தாக்கி சிறுவன் கீழே விழுந்ததில் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.