News May 26, 2024
தவறி கீழே விழுந்தார் வைகோ

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வீட்டில் தவறி கீழே விழுந்துவிட்டதாக அவரது மகன் துரை வைகோ தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வைகோவுக்கு தோள் பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும் சிகிச்சைக்காக அவர் சென்னை விரைந்துள்ளார் என்றும் துரை வைகோ கூறியுள்ளார். நாகர்கோவில் மாவட்டச் செயலாளர் வெற்றிவேல் இல்ல திருமண விழாவில் வைகோ பங்கேற்கவிருந்த நிலையில் துரை வைகோ பங்கேற்று இத்தகவலை கூறினார்.
Similar News
News April 3, 2026
IPL: முதல் வெற்றியை பெறுமா CSK?

IPL-ல், இன்று CSK, PBKS அணிகள் சேப்பாக்கத்தில் மோதுகின்றன. RR-க்கு எதிரான போட்டியில் படுதோல்வி அடைந்த CSK, தொடரின் முதல் வெற்றியை உள்ளூரில் பதிவு செய்யும் முனைப்பில் உள்ளது. பேட்டிங்கில் CSK வீரர்கள் ஜொலித்தாலே போட்டியில் வெல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாக வல்லுநர்கள் கணிக்கின்றனர். பிரெவிஸ் இன்றைய போட்டியில் களமிறங்குவார் என கூறப்படுகிறது. PBKS அணியும் வலுவாக இருப்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும்.
News April 3, 2026
மோடியின் வருகை = திமுகவின் வெற்றி: ஸ்டாலின்

வெளிநாட்டில் வாழும் PM மோடி, தேர்தல் சீசனில் மட்டுமே தமிழகம் வருவதாக ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். கோவையில் பிரசாரம் செய்த ஸ்டாலின், 2024 தேர்தலில் PM மோடி ரோடு ஷோ நடத்திய போது திமுக 40-க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக தெரிவித்துள்ளார். இம்முறையும் அவர் ரோடு ஷோ நடத்தினால் 200 தொகுதிகளில் வெற்றி என்ற திமுகவின் இலக்கு உறுதியாகிவிடும் எனவும் ஸ்டாலின் கூறினார். <<-se>>#TNElection2026<<>>
News April 3, 2026
இன்றைய நல்ல நேரம்

ஏப்ரல் 3, பங்குனி 20 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: பிரதமை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்


