News May 26, 2024
ராமேஸ்வரத்தில் திடீரென உள்வாங்கிய கடல்

வங்கக்கடலில் உருவான ரெமல் புயல் தீவிர புயலாக வலுவடைந்துள்ள நிலையில், ராமேஸ்வரத்தில் 50 மீட்டர் தூரத்துக்கு திடீரென கடல் உள்வாங்கியுள்ளது. இதனால் படகுகள் தரை தட்டி நிற்கின்றன. இதை அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். காலநிலை மாற்றத்தாலேயே கடல்நீர் உள்வாங்கியிருப்பதாகவும், விரைவில் கடல்நீர் பழைய நிலைக்கு திரும்பி விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 9, 2026
கோடை மழை.. 12 மாவட்டங்களில் அலர்ட்

தமிழகத்தில் வெயில் சுட்டெரித்தாலும், ஏப்.15 வரை மழை பெய்யவும் வாய்ப்பிருக்கிறதாம். குறிப்பாக, இன்று குமரி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 12 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் அடுத்த 1 வாரத்திற்கு குடையை மறக்காதீங்க! SHARE IT
News April 9, 2026
ஆன்ட்டி என அழைத்தவருக்கு ₹1.8 லட்சம் அபராதம்

லண்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் இல்டா எஸ்டீவ்ஸ் (61) நர்ஸாக பணியாற்றுகிறார். அங்கு சக ஊழியர் ஒருவர், பலமுறை கூறியும் அவரை ஆன்ட்டி என அழைத்துள்ளார். பணியிடத்தில் இப்படி அழைப்பது வயது, பாலின பாகுபாட்டிற்கு ஒப்பானது & தன்னை அவமதிப்பதாகும் என கூறி அப்பெண் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், பெண்ணின் மனதை புண்படுத்தியதற்காக ₹1.8 லட்சம் இழப்பீடு வழங்குபடி ஹாஸ்பிடலுக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
News April 9, 2026
BREAKING: செல்போன் ரீசார்ஜ் விலை குறைகிறது

டேட்டா பயன்பாடு இல்லாத, அழைப்புகள் மற்றும் SMS-க்கு மட்டும் குறைந்த விலையில் சிறப்பு ரீசார்ஜ் திட்டங்களை (STV) அறிமுகப்படுத்த டெலிகாம் நிறுவனங்களுக்கு TRAI பரிந்துரைத்துள்ளது. ஜியோ, ஏர்டெல், Vi போன்ற நிறுவனங்கள், மொபைல் டேட்டா இல்லாத சலுகைகளை அறிமுகப்படுத்தினால், தற்போதைய ரீசார்ஜ் விலையை விட(₹40 – ₹60) கட்டணம் குறைய வாய்ப்புள்ளது. இதனால், பட்டன் செல்போன் பயன்படுத்தும் பலர் பயனடைவார்கள்.


