News May 26, 2024
18 வருடங்களை நிறைவு செய்த ‘புதுப்பேட்டை’

தனுஷ் நடித்த ‘புதுப்பேட்டை’ திரைப்படம், இன்றுடன் 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான இப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. பிழைப்பிற்காக ரவுடியாக மாறுவதைப் பற்றிப் பேசும் இப்படத்தின் பின்னணி இசை, பாடல்கள் பட்டையைக் கிளப்பி இருக்கும். குறிப்பாக, ‘ஒரு நாளில்’ பாடல், இப்போதும் ரசிகர்களின் ஃபேவரைட். உங்களுக்கு இந்தப் படம் பிடிக்குமா?
Similar News
News March 8, 2026
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

புதுக்கோட்டை, திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நாளை(9.3.2026) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் நாளை இயங்காது. அதேநேரம், அரசு பொதுத்தேர்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதியின்படி மாற்றமின்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News March 8, 2026
திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் MLA

அதிமுக முன்னாள் MLA இளையக்கண்ணு திமுகவில் இணைந்துள்ளார். 2001 முதல் 2006 வரை ஏற்காடு சட்டமன்ற தொகுதி MLA-வாக பதவி வகித்த இளையக்கண்ணு, அதிமுகவிலும் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். EPS மீது ஏற்பட்ட அதிருப்தியால் கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த அவர், சேலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.
News March 8, 2026
BREAKING: அதிமுக கூட்டணியில் விஜய்? பரபரப்பு தகவல்

அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் விஜய்யை கொண்டுவர தீவிர பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஜனசேனா கட்சியின் தலைவரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண், விஜய்யை NDA கூட்டணியில் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். விஜய் கூட்டணிக்கு வருகிறாரா? இல்லையா என்பதை தெரிந்துகொண்டு தொகுதிப்பங்கீடு தொடர்பான முடிவை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.


