News May 26, 2024
ஆவின் பொது மேலாளர் பணியிடை நீக்கம்

காக்களூர் ஆவின் பால் பண்ணையில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் ஆய்வு செய்த போது நாள் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான பால் பொருட்கள் திருடி கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து துணை மேலாளர் கனிஷா உள்பட 3 பேர் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் பொது மேலாளர் ரமேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து, ஆவின் மேலாண்மை இயக்குநர் வினித் நேற்று உத்தரவிட்டார்.
Similar News
News July 7, 2025
திருவள்ளூர் மக்களே உங்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

திருவள்ளூர் காவல் துறை தனது சமூக வலைத்தளத்தில் வேலை வாய்ப்பு மோசடிகள் பொதுவாக உண்மையான வேலை வாய்ப்புகளைப் போல தோன்றும், ஆனால் அவை பணம், மற்றும் தனிப்பட்ட தகவல்களை திருடி மோசடிகளில் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் இது போன்ற மோசடிகளிலிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை பதிவு வெளியிட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
News July 7, 2025
திருவள்ளூரில் பொறியியல் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஜூலை 11ம் தேதி நடைபெறும் பொறியியல் கல்லூரி மாணவ மாணவியருக்கான திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
News July 7, 2025
திருவள்ளூரில் மகளிருக்கான தொழில் விழிப்புணர்வு

திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஜூலை 10ம் தேதி நடைபெறும் மகளிருக்கான தொழில் நெறிவழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மகளிர் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.