News May 26, 2024
மின் இணைப்பு துண்டிப்பு: முன்கூட்டி தெரிவிக்க வேண்டும்

அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதா ஆட்சியில் அளிக்கப்பட்டது போல 100 யூனிட் விலையில்லா மின்சாரம், ஏழை, எளிய, நடுத்தர வாடகைதாரர்களுக்கும் தொடர்ந்து கிடைத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கட்டணம் செலுத்தாதோரின் மின் இணைப்பை துண்டிக்கும் முன்பு அவர்களுக்கு தகவல் தெரிவித்து, கட்டணத்தைச் செலுத்த அறிவுறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.
Similar News
News March 24, 2026
இந்தியா நோக்கி புறப்பட்ட அடுத்த 2 கப்பல்கள்

ஹார்முஸ் நீரிணையில் இருந்து அடுத்த 2 கப்பல்கள் இந்தியா நோக்கி புறப்பட்டுள்ளன. பைன் கேஸ் மற்றும் ஜக் வசந்த என்ற கப்பல்கள் 92,000 டன் LPG உடன் ஓரிரு நாள்களில் இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே 3 இந்திய கப்பல்கள் வெற்றிக்கரமாக வந்தடைந்தன. மேலும், ஹார்முஸ் நீரிணையில் பல்வேறு நாடுகளை 500-க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது
News March 24, 2026
லெபனானில் தாக்குதல்.. வெளியேறும் மக்கள்

ஈரானுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தியது. இதனை தொடர்ந்து, லெபனானையும் இஸ்ரேல் தாக்கி வருகிறது. இதனால், லெபனானில் தெற்கு பகுதியில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு உயிர்பிழைக்க தஞ்சம் தேடி குடும்பத்துடன் வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். இந்த எண்ணிக்கை ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 5-ல் ஒரு பங்கு ஆகும்.
News March 24, 2026
புத்தர் பொன்மொழிகள்

▶உள்ளத்தில் கோபம் இருந்தால் மட்டுமே வெளியில் எதிரி இருக்க முடியும். ▶யாரிடம் குறைவான ஆசைகளும், மன அமைதியும் உள்ளதோ அவர்கள் கவலையின்றி வாழ்கிறார்கள். ▶வாழ்வில் நிலையான ஒரே விஷயம் மாற்றம் மட்டுமே என்பதை நினைவில்கொள்ளுங்கள். ▶அனைத்தும் நம் மனதின் பிரதிபலிப்பு என்பதால், நம் மனதால் அனைத்தையும் மாற்ற முடியும். ▶உங்கள் செயல்கள் மட்டுமே உங்களின் உண்மையான உடமைகள்.


