News May 26, 2024
திருடனை மும்பை சென்று தூக்கிய போலீஸ்

மொடக்குறிச்சி அடுத்த லக்காபுரம் ரிங்ரோட்டில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்கில் கடந்த ஆண்டு(01.02.2023) இரண்டு நபர்கள் ரூ.48,000 கொள்ளையடித்து சென்றனர். அடுத்த 24 மணி நேரத்தில் குமரேசனை போலீசார் கைது செய்த நிலையில் தப்பி ஓடிய இசக்கி பாண்டி (24) என்பவரை தேடி வந்தனர். இந்நிலையில் ஓராண்டுக்கு பிறகு இசக்கி பாண்டியை போலீசார் மும்பையில் கைது செய்து பணத்தை மீட்டு இன்று மொடக்குறிச்சிக்கு அழைத்து வந்தனர்.
Similar News
News August 19, 2025
ஈரோடு மக்களே, இதை மிஸ் பண்ணாதீங்க!

ஈரோடு மக்களே ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம்.இதனை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News August 19, 2025
ஈரோட்டில் 1600 விநாயகர் சிலை வைக்கப்படும்

ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி வரும் 27ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதனையொட்டி ஆண்டுதோறும் இந்து அமைப்புகள் மட்டுமின்றி தனியார் சார்பிலும், சில அமைப்புகள் சார்பிலும், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை
வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம், கடந்தாண்டை போலவே இந்தாண்டும்
1,600 விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
News August 19, 2025
ஈரோடு: இன்று நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

ஈரோடு மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம், இன்று ஆக.,19 கீழ்கண்ட இடங்களில் நடைபெற உள்ளது. சித்தோடு (சித்தோடு செங்குந்த கைகோல முதலியார் திருமண மண்டபம்-சித்தோடு), ஊஞ்சலூர் (சமுதாய கூடம்,ஊஞ்சலூர்), பெருந்துறை ட.ப., (சத்தி திருமண மண்டபம்,பெருந்துறை), பவானி நகராட்சி (பாலாஜி பத்மாவதி மண்டபம்,பவானி), அந்தியூர் பிளாக் (வாரி மஹால்,முனியப்பம்பாளையம்), சத்தி-கொமராபாளையம் (கொங்கு மஹால்).