News May 26, 2024

திண்டுக்கல் அருகே விபத்து

image

வேடசந்தூா் அருகே நேற்று லாரி மீது சுற்றுலா வேன் மோதியதில் பெங்களூருவைச் சோ்ந்த 12 போ் காயமடைந்தனா். இதில் ஓட்டுநா் கிரேன் உள்ளிட்ட12 பேரும் பலத்த காயமடைந்தனா். இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்தவா்களை மீட்டு , வேடசந்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதில் 6 போ் தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனா்.

Similar News

News March 8, 2026

திண்டுக்கல்: ரூ.54,000 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY NOW

image

IDBI வங்கியில் காலியாக உள்ள 1100 Junior Assistant Manager பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 20 – 25 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 19க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். முதல் 6 மாத பயிற்சியின் போது உதவித்தொகை ரூ.5,000, அடுத்த 2 மாத பயிற்சிக்கு ரூ.15,000, பணியின் போது சம்பளம் மாதம் ரூ.51,000 – ரூ.54,000 வரை வழங்கப்படும். இந்த பயணுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News March 8, 2026

வடமதுரை அருகே விபத்து; ஒருவர் பலி!

image

வடமதுரை பகுதியை சேர்ந்த வசந்த் (21) நேற்று முன்தினம் நேரு (21) என்பவருடன் டூவீலரில் கொல்லப்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நடந்து சென்ற அடையாளம் தெரியாத முதியவர் மீது டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், படுகாயம் அடைந்த அந்த முதியவர் உயிரிழந்தார். காயமடைந்த வசந்த், நேரு ஆகியோர் திண்டுக்கல் GH-ல் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்

News March 8, 2026

திண்டுக்கல்: இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டாஸ்!

image

கள்ளிமந்தயம் பகுதியில் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்திய வழக்கில் மதுரை பேரையூர் சேர்ந்த நாகஅர்ஜுன் (26) கைது செய்யப்பட்டார். எரியோடு பகுதியில் நடந்த கொலை வழக்கில் வேடசந்தூர் பாகாநத்தத்தை சேர்ந்த ஆனந்தராஜ் (33) கைது செய்யப்பட்டார். இவர்களின் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் மாவட்ட எஸ்பி பிரதீப் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சரவணன் உத்தரவின்படி இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

error: Content is protected !!