News May 26, 2024

தேர்தலில் தோற்றால் கார்கே மீது காங்கிரஸ் பழிபோடும்

image

இமாச்சல் மாநிலம் சிம்லாவில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், மக்களவைத் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறுவது உறுதி என்று கூறினார். அதே நேரத்தில் தேர்தலில் காங்கிரஸ் தோற்பது உறுதி என்றும், அந்தத் தோல்விக்கு இவிஎம் இயந்திரம் மீதும், மல்லிகார்ஜுன கார்கே மீதும் காங்கிரஸ் பழிபோட்டுவிடும் என்றும் அவர் விமர்சித்தார்.

Similar News

News March 17, 2026

கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்

image

CPI-யின் மதூர் சத்யா மீதான பாலியல் புகார் தொடர்பாக கட்சி தலைமை அலுவலகத்தில் மூத்த தலைவர்கள் ஆலோசனை செய்தனர். இதன்பின், மதூர் சத்யாவை கட்சியிலிருந்து நீக்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர். AIYF, ISCUF அமைப்புகளில் மதூர் சத்யா வகித்து வந்த அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினரில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் நேரத்தில் இந்த பாலியல் விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளது.

News March 17, 2026

ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் செய்ய App அறிமுகம்

image

SUVIDHA 2.0 என்ற புதிய செயலியை ECI அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியின் மூலம் வேட்பாளர்கள், தங்கள் வேட்புமனுவை ஆன்லைனிலேயே தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாடுகள் பற்றி ECI விரிவாக விரைவில் தெளிவுபடுத்தும் என தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும், மக்களைக் கவரும் நோக்கில் நேரடியாகச் சென்று வேட்புமனு தாக்கல் செய்வதையே வேட்பாளர்கள் விரும்புவர் என்றும் கூறப்படுகிறது.

error: Content is protected !!