News May 26, 2024
IPL திருவிழா இன்றோடு முடிகிறது

மார்ச் 22ஆம் தேதி தொடங்கி 2 மாதங்களுக்கும் மேலாக ரசிகர்களை மகிழ்வித்த ஐபிஎல் தொடர் இன்றோடு முடிவு பெறுகிறது. பல திருப்பங்களுக்குப் பின் கொல்கத்தா – ஹைதராபாத் அணிகள் இன்று இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளன. இத்தொடரில் சென்னை, மும்பை அணிகள் லீக் சுற்றிலேயே வெளியேறியது பெரும் ஏமாற்றத்தை அளித்தாலும், தொடரை வெல்ல தகுதியான அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடுவதாக ரசிகர்கள் திருப்தி தெரிவிக்கின்றனர்.
Similar News
News March 21, 2026
அதிமுக அலுவலகத்தை பூட்டி வைத்துவிடுங்கள்: நேரு

டெல்லி சென்று அமித்ஷாவுடன் EPS ஆலோசனை நடத்தியதை அமைச்சர் நேரு விமர்சித்துள்ளார். NDA-வுக்கு TN-ல் ADMK தலைமை என்றால் அக்கட்சியின் அலுவலகத்தில் தானே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கூடுதல் இடங்களை பெற EPS இன்னொரு கட்சி தலைவர் வீட்டில் காத்துக் கிடப்பது காலக்கொடுமை எனவும் தேர்தல் முடியும் வரை ADMK அலுவலகத்தை பூட்டை வைத்துவிடுங்கள் என்றும் சாடியுள்ளார்.
News March 21, 2026
வரலாற்றில் இன்று

➤ உலக காடுகள் தினம் ➤1917 – டானிஷ் மேற்கிந்தியத் தீவுகள், கன்னித் தீவுகள் எனப் பெயர் மாற்றப்பட்டது. ➤1945 – பிரிட்டன் விமானங்கள் டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் பாடசாலை ஒன்றின் மீது குண்டுகளை வீசியதில் 125 பேர் கொல்லப்பட்டனர். ➤1990 – 75 ஆண்டுகால தென்னாபிரிக்க ஆட்சியிலிருந்து நமீபியா விடுதலை பெற்றது. ➤2006 – டிவிட்டர் (தற்போது எக்ஸ்) சமூக ஊடகம் தொடங்கப்பட்டது.
News March 21, 2026
குற்ற வழக்கு விவரங்களை விளம்பரம் செய்ய வேண்டும்: ECI

குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்கள் அதன் விவரங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இதற்காக ECI வரையறுத்துள்ள படிவங்களின்படி உறுதிமொழியினை, வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட 2 நாள்களில் விளம்பரம் வெளியிடப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார். வாக்குப்பதிவு முடிவதற்கு 2 நாள் முன்பு வரை 3 முறை வெவ்வேறு நாள்களில் விளம்பரம் வெளியிடப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.


