News May 26, 2024

டி20: பாக்., அணிக்கு எதிராக இங்கிலாந்து அபார வெற்றி

image

இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 183 ரன்களை குவித்துள்ளது. அந்த அணியின் பட்லர் அதிரடியாக ஆடி 51 பந்தில் 84 ரன்களை குவித்தார். தொடர்ந்து விளையாடி பாகிஸ்தான், 160 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. ஃபகார் ஜமான் அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார். இரு அணிகளுக்குமான முதல் போட்டி மழையால் தடை பட்டது.

Similar News

News August 18, 2025

நான் குடிப்பேன்.. ஒப்புக் கொண்ட தனுஷ் பட ஹீரோயின்

image

தனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக சம்யுக்தா மேனன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தினமும் குடிப்பதில்லை, மன அழுத்தம் (அ) பதட்டம் ஏற்படும்போது மட்டுமே குடிப்பதாகவும் காரணம் கூறியுள்ளார். தனுஷின் ‘வாத்தி’ படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமான அவர், விஜய் சேதுபதியுடன் ஒரு படம், Benz படங்களில் நடித்து வருகிறார்.

News August 18, 2025

பெண்களுக்கு ₹25 லட்சம் கடன்.. தமிழக அரசு அறிவிப்பு

image

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பெண்கள் ₹25 லட்சம் வரை தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, BC, MBC, சீர் மரபினர்(DNC) உள்ளிட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு கடன் வழங்கப்பட உள்ளது. ₹1.25 லட்சம் வரை வட்டி விகிதம் 7%, ₹1.25 லட்சம் முதல் ₹15 லட்சம் வரை வட்டி விகிதம் 8% எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடனை திருப்பிச் செலுத்தும் காலம் 3 முதல் 5 ஆண்டுகளாகும். SHARE IT.

News August 18, 2025

டெல்லியில் PM மோடி – சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

image

NDA-வில் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், PM மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பு தொடர்பான போட்டோக்களை தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ள PM மோடி, நீண்ட ஆண்டுகால பொது சேவை மற்றும் அனுபவங்களை கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் செயல்படுவார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!