News May 25, 2024
ஹர்திக் குறித்து நடாஷா பதிவு?

ஹர்திக் பாண்டியா தனது மனைவி நடாஷாவை பிரிந்து வாழ்வதாக தகவல்கள் வெளியாகின. இதனை உறுதிப்படுத்தும் வகையில், பாண்டியாவுடன் இருந்த புகைப்படங்களை நடாஷா தனது சமூக வலைதளங்களில் இருந்து நீக்கினார். இந்நிலையில், ‘யாரோ ஒருவர் தெருவுக்கு வரப்போகிறார்கள்’, என போக்குவரத்து சிக்னல்களின் புகைப்படத்துடன் நடாஷா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இது பாண்டியாவை குறிக்கும் வகையில் அவர் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News March 14, 2026
ஈரானின் கிரீடத்தில் மிகப்பெரிய தாக்குதல்

மத்திய கிழக்கு வரலாற்றில் ஈரானின் கிரீடமாக கருதப்படும் கார்க் தீவில் சக்திவாய்ந்த குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். கார்க் தீவில் உள்ள ஈரானின் ராணுவ நிலைகள் முழுவதுமாக அழிக்கப்பட்டதாக கூறிய அவர், அங்குள்ள எண்ணெய் கட்டமைப்பை அழிக்க விரும்பவில்லை; ஆனால், கப்பல்கள் செல்வது தடுக்கப்பட்டால், அதையும் அழிப்பேன் என்று எச்சரித்துள்ளார்.
News March 14, 2026
அதிமுகவை பாஜக கபளீகரம் செய்யும்: உதயநிதி

பிஹாரில் நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட நிலையே EPS-க்கும் ஏற்படும் என உதயநிதி கூறியுள்ளார். 10 முறை CM ஆக இருந்த நிதிஷ்குமாரையே தற்போது ராஜ்யசபா MP ஆக மாற்றி, அம்மாநில ஆட்சியை பாஜக தன்வசமாக்கிவிட்டது என்ற அவர், இதேபோல் தான், 2026 தேர்தலுக்குப் பிறகு அதிமுகவை பாஜக கபளீகரம் செய்துவிடும் என்று குறிப்பிட்டார்.
News March 14, 2026
தவெகவில் இருந்து நீக்குக.. விஜய்க்கு பரபரப்பு கடிதம்

‘அரசியல் முதிர்ச்சி இல்லாத நபர்களை கட்சியை விட்டு விலக்குங்கள்’ என விஜய்க்கு பாஜக நிர்வாகி அர்ஜுன மூர்த்தி கடிதம் எழுதியுள்ளார். ரஜினி குறித்து ஆதவ் உள்ளிட்டோர் அரசியல் நாகரிகம் இல்லாத கருத்துகளால் தேவையற்ற மோதல்களையும், மரியாதை குறைபாடுகளையும் உருவாக்கி வருகின்றனர். தங்கள் மீதுள்ள மரியாதையும், அவர்களின் பேச்சால் பதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதால், கட்சியில் இருந்து நீக்குங்கள் என கூறியுள்ளார்.


