News May 25, 2024
காஷ்மீரில் விரைவில் தேர்தல்: ராஜீவ் குமார்

ஜம்மு & காஷ்மீரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நம்பிக்கை அளிப்பதாக தெரிவித்த அவர், காஷ்மீர் மக்களே அவர்களுக்கான அரசை தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் என்றார். காஷ்மீரில் 2018 முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது. 6 மாதங்களுக்கு ஒரு முறை அது புதுபிக்கப்பட்டு வருகிறது.
Similar News
News March 5, 2026
திருப்பதி வைகுண்ட தரிசன டிக்கெட்.. Whatsapp-ல் பெறலாம்!

திருப்பதி கோயில் தரிசன டோக்கனை WhatsApp மூலம் ஈசியாக பெறலாம் தெரியுமா? Whatsapp-ல் ஆந்திர அரசு சேவை எண் ‘9552300009’ நம்பருக்கு ‘Hi’ என மெசேஜ் செய்யுங்கள். சேவைகள் அடங்கிய மெசேஜ் வரும். அதில், TTD temple service-ஐ தேர்வு செய்து, தேதி & நேரத்தை தேர்வு செய்து டிக்கெட்டை புக் செய்யலாம். கட்டணத்தை செலுத்திய பிறகு, டிக்கெட் மெசேஜ் வந்துவிடும். இந்த பதிவை அனைத்து நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
News March 5, 2026
கடன் தள்ளுபடி.. இனிப்பான செய்தி

கூட்டுறவு & நகைக் கடன் தள்ளுபடி குறித்த வாக்குறுதி எப்போது வெளியாகும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இதனிடையே, 5 ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகளின் பயிர்க் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என விஜய் வாக்குறுதி அளித்துள்ளார். இந்நிலையில், திமுக, அதிமுக தரப்பில் கடன் தள்ளுபடி தொடர்பான வாக்குறுதி வெளியாகும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். கடந்த முறை 5 சவரன் நகைக்கடனை திமுக தள்ளுபடி செய்தது.
News March 5, 2026
தவெகவுடன் கூட்டணி.. ராகுலை தடுத்தாரா கார்கே?

தவெகவுடன் கூட்டணி அமைத்தால் இளைஞர்களின் ஆதரவை பெறுவதோடு, TN-ல் காங்கிரஸை வலுப்படுத்தலாம் என ராகுல் காந்தி கணக்கிட்டாராம். ஆனால், தேர்தல் நேரத்தில் கூட்டணியை முறிக்க கூடாது; மத்தியில் பாஜக அரசை எதிர்கொள்ள திமுக MP-க்களின் பலமும் தேவை என ராகுலிடம் கார்கே கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தவெக தனது வாக்குவங்கியை நிரூபித்தால், அடுத்த தேர்தலில் கூட்டணி குறித்து பார்க்கலாம் என கார்கே கூறினாராம்.


