News May 25, 2024
பதவியின் மாண்பை குலைத்து விடாதீர்கள்

முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் என்ன பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேச வேண்டும் என பிரதமரை மறைமுகமாக சரத் பவார் விமர்சித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சி காலம் குறித்த மோடியின் பேச்சுகள் வேதனை தருகிறது என்று கூறிய அவர், பிரதமர் பதவியின் மாண்பை தேவையற்ற பேச்சுக்களின் மூலம் யாரும் குலைக்க கூடாது என்றார். முன்னதாக, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்தியா மீது பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்தியதாக மோடி கூறியிருந்தார்.
Similar News
News March 7, 2026
திமுக டெபாசிட்டை இழக்கும்: ராஜேந்திர பாலாஜி

திமுக தங்களது கூட்டணியில் 50 கட்சிகளை இணைத்தாலும், அனைத்து இடங்களில் டெபாசிட்டை இழக்கும் என்று ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். அண்ணா உருவாக்கிய திமுகவை ஸ்டாலின் கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றிவிட்டார் என விமர்சித்த அவர், எங்களை எதிர்க்கும் துணிச்சல் திமுக கூட்டணிக்கு கிடையாது என்றார். மேலும், நாங்கள் டெல்லிக்கு அடிமை கிடையாது; எங்களை அடிமைப்படுத்தும் சக்தி யாருக்கும் கிடையாது எனவும் தெரிவித்தார்.
News March 7, 2026
காங்.,காக மக்கள் நலனை அடகு வைத்த திமுக: அண்ணாமலை

TN உரிமையை காக்காமல், கர்நாடக அரசுக்கு சாதகமாக திமுக அரசு நடப்பதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது, TN மக்களின் நலனுக்கு திமுக செய்யும் துரோகம் என விமர்சனம் செய்துள்ள அவர், காங்கிரஸுடன் கூட்டணியை உறுதி செய்த மறுநாளே காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட அம்மாநில பட்ஜெட்டில் அறிவிப்பு வருவது வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார். கூட்டணிக்காக தமிழக விவசாயிகளின் நலனை அடகு வைத்துவிட்டதாகவும் சாடியுள்ளார்.
News March 7, 2026
TN தேர்தல் தேதி.. வெளியானது புதிய அப்டேட்

தமிழ்நாட்டில் ஏப்.15-ல் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால், ஒருபுறம் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப்பங்கீடு என மும்முரமாக ஈடுபட்டுள்ளன. மற்றொருபுறம் ECI-யும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில், தற்போது தேர்தல் பணிகளுக்காக விசாகப்பட்டினத்தில் இருந்து துணை ராணுவம் தமிழகம் வருகை தந்துள்ளது. சுமார் 70 பேர் கொண்ட CRPF வீரர்கள் சென்னை KK நகரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


