News May 25, 2024
ஏரியில் குளிக்க சென்ற இளைஞன் பலி

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஏரியில் நேற்று குளிக்க சென்ற வி.ஆர். பி. சத்திரம் பகுதியை சேர்ந்த சூர்யா என்ற இளைஞர் நீரில் மூழ்கி வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி இன்று மதியம் சூரியாவி உடலை மிட்டனர். சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Similar News
News April 20, 2025
சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி

குன்றத்தூரில், நேற்று (ஏப்ரல் 19) கலைஞர் கைவினைத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அவர் அளித்த 5 அறிக்கைகளில், “காக்களூர் உற்பத்தியாளர்கள் தொழிற்பேட்டையில், ரூ.3.90 கோடியில் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி மையம் ஏற்படுத்தப்படும். சிறு, குறு தொழில் நிறுவனங்கள், உள்நாட்டில் வர்த்தக கண்காட்சிகளில் பங்கேற்க நிதியுதவி ரூ.1-லிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்” என்றார்.
News April 20, 2025
மனித உரிமையை நிலைநாட்டக்கூடியது: முதல்வர்

குன்றத்தூரில் நேற்று (ஏப்ரல் 19) நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “தமிழ்நாட்டின் அனைத்து கைவினைக் கலைஞர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ள கலைஞர் கைவினைத் திட்டம், சமூகநீதி, மனித உரிமை ஆகியவற்றை நிலைநாட்ட கூடியது” என தெரிவித்தார். மேலும், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு 3ஆவது இடத்தில் உள்ளது” என்றார்.
News April 20, 2025
காஞ்சிபுரம் மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

▶வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகம் – 044-27256090, ▶குன்றத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் – 044-24780449, ▶உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகம் – 044-27272230, ▶ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகம் – 044-27162231, ▶காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் – 044-27222776, ▶ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் – 9444964899, ▶காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் – 9445000413. ஷேர் செய்யுங்கள்.