News May 25, 2024

இந்த மாதிரியான தனிநபர் கடனுக்கு வருமான வரி விலக்கு

image

தனிநபர் கடன் வாங்கினால், வருமான வரி விலக்கு கோர முடியாது. ஆனால், வருமான வரிச் சட்டப்பிரிவு 24B படி வீட்டை மறுசீரமைப்பு செய்ய தனிநபர் கடன் வாங்கினால், அதற்கு வருமான வரி விலக்கு கிடைக்கும். ஒரு நிதியாண்டில் ₹30000 வரை, கடனுக்காக செலுத்திய வட்டித் தொகையில் வருமான வரி விலக்கு கோரலாம். இதேபோல, வெளிநாட்டில் படிக்க தனிநபர் கடன் வாங்கினாலும், நாம் செலுத்தும் மொத்த வட்டி தொகைக்கும் வரி விலக்கு கிடைக்கும்.

Similar News

News August 18, 2025

அன்புமணிக்கு அழுத்தம்; ராமதாஸின் அடுத்த நடவடிக்கை

image

ராமதாஸ் தலைமையில் நேற்று (ஆக., 18) நடந்த பாமக சிறப்பு பொதுக்குழுவில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இந்நிலையில் அதற்கு முறையான விளக்கமளிக்குமாறு அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு. இதற்கு விளக்கமளிக்க அன்புமணி மறுக்கும் பட்சத்தில், அவர் கட்சியில் இருந்து நீக்கப்படலாம் எனவும் பாமக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

News August 18, 2025

உங்க வாழ்க்கை துணையுடன் நெருக்கம் அதிகரிக்க..

image

தேசிய தம்பதியர் தினத்தில் உங்களின் பார்ட்னருடன் நெருக்கம் அதிகரிக்க 5 டிப்ஸ்.
✦நம்பிக்கையும் பொறுமையும் மிக அவசியம்.
✦எதையும் மறைக்காமல் ஒளிவு மறைவின்றி பேசுங்கள்.
✦பிறந்தநாள், திருமண நாள் போன்றவற்றை கொண்டாட தவறாதீர்கள்.
✦எவ்வளவு பிஸியாக இருந்தாலும், இருவரும் ஒன்றாக நேரம் செலவிடுங்கள்.
✦கடந்த கால மகிழ்ச்சியான தருணங்களை நினைவு கூருங்கள். இது உங்களுக்குள் இருக்கும் இடைவெளியை குறைக்கும்.

News August 18, 2025

பலத்த காற்றுடன் கனமழை வெளுக்கும்

image

தமிழ்நாட்டில் அடுத்த 7 நாள்களுக்கு மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றுள்ளது. இதனால், இன்று கோவை, நீலகிரியில் கனமழை வெளுத்து வாங்க வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 40 கிமீ – 50 கிமீ வரை பலத்த தரைக்காற்று வீசும் என்றும், சென்னையில் அடுத்த 2 நாள்களுக்கு மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!