News May 25, 2024

திருமயம் அருகே ஒருவர் பலி!

image

திருமயம் அருகே குருவிக்கொண்டான்பட்டியைச் சேர்ந்தவர் கல்யாணி(55). இவரது மனைவி லெட்சுமி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. சம்பவத்தன்று குடும்பத்தகராறில் விஷம் குடித்து மயங்கி கிடந்த கல்யாணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு புதுகை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பனையபட்டி போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 24, 2025

புதுகை: கார் கவிழ்ந்து விபத்து

image

புதுக்கோட்டை அய்யனார்புரம் 3-ம் வீதியை சேர்ந்தவர் ஜெகன் எபினேஷ். இவரது தாய் சாந்தி, எபினேஷ் இருவரும் காரில் குடுமியான்மலையில் நடைபெற்ற உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பி உள்ளனர். அப்போது கார் அண்ணாபண்ணை அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஜெகன் எபினேஷ், இவரது தாய் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

BREAKING: புதுகை மாவட்டத்திற்கு இன்று விடுமுறை

image

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வரும் காரணத்தால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (நவ.24) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!