News May 25, 2024
3 மாதங்களில் செய்து காட்டுவோம்: நாராயணசாமி

INDIA கூட்டணி ஆட்சி அமைத்தால் 3 மாதங்களில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ராமர் கோயிலை இடிக்கும் என்று பொய் பரப்புரைகளை மோடி கூறி வருவதாக தெரிவித்த அவர், அனைத்து மதங்களையும் சமமாக நினைக்கும் ஒரே கட்சி காங்கிரஸ் என்றார். பாஜக 200 இடங்களை தாண்டாது என்ற அவர், காங்கிரஸ் கூட்டணி 300 இடங்களை பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
Similar News
News March 6, 2026
35 சீட்.. தவெக கூட்டணியில் ராமதாஸ்?

NDA-வில் இணைவதற்கு அன்புமணி செக் வைத்ததாலும், திருமாவின் நிலைப்பாட்டால் திமுகவுடன் கூட்டணி அமைக்க முடியாமலும் ராமதாஸ் தவிக்கிறார். சமீபத்தில் தங்களுக்கான வாகனம் வந்துவிட்டதாக அவர் கூறினாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில், பாமகவுக்கு செல்வாக்கு உள்ள 35 தொகுதிகளின் லிஸ்ட்டை ராமதாஸ் தயாரித்துள்ளாராம். அதை விஜய்யிடம் தந்து தவெகவுடன் கூட்டணி சேர முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
News March 6, 2026
6G சேவை.. பின்லாந்துடன் இந்தியா ஒப்பந்தம்

பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் இந்தியா வந்துள்ள நிலையில், இந்தியா-பின்லாந்து இடையே 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குடியேற்ற ஒத்துழைப்பு, சுற்றுச்சுழல், புள்ளிவிபரத் துறையில் ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் PM மோடி முன்னிலையில் கையெழுத்தானது. இதன் மூலம், இந்தியா-பின்லாந்து இடையே AI, 6ஜி தொலைத்தொடர்பு, எரிசக்தி, குவாண்டம் கம்ப்யூட்டிங் துறைகளில் ஒத்துழைப்பு மேம்படும்.
News March 6, 2026
₹6,769 கோடி வருவாய் ஈட்டிய பாஜக

2024-25 நிதியாண்டில் நன்கொடை மூலம் பாஜக ₹6,769 கோடி வருமானம் ஈட்டியதாக ஜனநாயக சீர்திருத்தங்கள் சங்கம்(ADR) கூறியுள்ளது. 6 தேசிய கட்சிகள் சுமார் ₹7,960 கோடி பெற்ற நிலையில், அதில் பாஜகவிற்கு 85% நன்கொடை கிடைத்துள்ளது. காங்கிரஸ் ₹918 கோடி நன்கொடை பெற்றுள்ளது. வருவாயில் ₹3,774 கோடியை பாஜக செலவழித்துள்ளது. காங்கிரஸ் வருவாயை தவிர்த்து கூடுதலாக ₹193.66 கோடி என மொத்தம் ₹1111.94 கோடி செலவழித்துள்ளது.


