News May 25, 2024
திண்டுக்கல் அருகே விபத்தில் 6 பேர் படுகாயம்

பெங்களூரில் இருந்து கொடைக்கானலுக்கு 12 பேருடன் சுற்றுலா சென்ற வாகனம் வேடசந்தூர் தம்மனம்பட்டி அருகே வந்த போது சேலத்திலிருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த லாரியின் பக்கவாட்டில் பயங்கரமாக மோதியது. இதில் சுற்றுலா வாகனத்தில் பயணம் செய்த 6 பேர் காயமடைந்தனர். அவர்களை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 24, 2025
BREAKING: விடுமுறை குறித்து திண்டுக்கல் கலெக்டர் அறிவிப்பு!

தமிழகத்தில் இன்று (நவ.24) கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில், திண்டுக்கல்லில் அதிக மழை இல்லாத காரணத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் அறிவித்துள்ளார்.
News November 24, 2025
BREAKING: விடுமுறையா? திண்டுக்கல் கலெக்டர் அறிவிப்பு!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (நவ.24) கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொடைக்கானலில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் அறிவித்துள்ளார்.
News November 24, 2025
திண்டுக்கல் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (நவ.25) கோவிலூர், ஒட்டன்சத்திரம், ரெட்டியபட்டி, உசிலம்பட்டி, சத்திரப்பட்டி, ஆத்தூர், விருப்பாச்சி, புலியூர்நத்தம், அம்பிளிக்கை, செம்பட்டி, , கசவனம்பட்டி, மேட்டுப்பட்டி, பூதிபுரம், வடமதுரை, அடியனூத்து, நாகல்நகர், செங்குறிச்சி, சிலுவத்தூர், செந்துறை, பிள்ளையார்நத்தம், காந்திகிராமம், தொப்பம்பட்டி, சின்னாளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிப்பு. SHARE IT!


