News May 25, 2024
குழந்தை திருமணம் – கலெக்டர் எச்சரிக்கை

தருமபுரி; குழந்தை திருமண தடை சட்டம் 2006-ன் படி குழந்தை திருமணத்தை நடத்திய பெற்றோர் (அ) பாதுகாவலர்கள், மணமகன், திருமணத்தை நடத்தி வைக்கும் மத தலைவர்கள், திருமணத்தில் கலந்து கொள்ளும் உறவினர்கள், நண்பர்கள், உதவி செய்யும் நபர்கள் அனைவரும் குற்றம் செய்தவராக கருதப்பட்டு அவர்களுக்கு 2 வருடங்கள் கடும் சிறை தண்டனை அல்லது 1 லட்சம் வரை அபராதம் (அ) இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்
Similar News
News March 7, 2026
பாலக்கோட்டில் உதிக்குமா சூரியன்?

5 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய தருமபுரி மாவட்டத்தில், பாலக்கோடு தொகுதி அரசியல் கவனம் பெற்றுள்ளது. அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் இத்தொகுதியில், EX அமைச்சர் கே. பி. அன்பழகன் 2001 முதல் தொகுதியை தன்வசப்படுத்தி வருகிறார். இந்த முறை அதிமுக-பாமக(அன்புமணி) கைகோர்த்திருக்கும் சூழலில், திமுக கூட்டணியும் தொகுதியை கைப்பற்ற முயற்சித்து வருவதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
News March 7, 2026
தருமபுரி: கழுத்தை அறுத்து படுகொலை

பாலக்கோடு: தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டை அடுத்த ஜெல்திம்மனுாரை சேர்ந்தவர் பாக்யராஜ், 35; இவரது மனைவி நிவேதிதா, 32. நிவேதிதாவின் நடத்தையில், பாக்யராஜுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 2 நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் கத்தியால் நிவேதிதாவின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த பாக்யராஜ் போலீசில் சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்த நிலையில், இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News March 7, 2026
தருமபுரி: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரங்கள்

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.06), இரவு முதல் இன்று (மார்ச்.07) காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் பொதுமக்கள் அவசர கால உதவி எண் 100, அல்லது இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்த தகவலை மற்றவர்களிடம் ஷேர் செய்யவும்.


