News May 25, 2024
கூகுள் மேப் பார்த்து ஓட்டியதால் விபரீதம்

கேரளாவில் கூகுள் மேப் பார்த்து ஓட்டிச் செல்லப்பட்ட கார், ஆற்றுக்குள் மூழ்கியது. ஹைதராபாத்தில் இருந்து ஒரு பெண் உட்பட 4 பேர் கேரளாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். ஆலப்புழா நோக்கி சென்றபோது கனமழை காரணமாக அவர்கள் பயணித்த சாலை நீரால் சூழப்பட்டிருந்தது. எனினும், கூகுள் மேப்பை நம்பி அவர்கள் பயணத்தை தொடரவே, வழி மாறி சென்ற கார் ஆற்றுக்குள் மூழ்கியது. இதில், அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்தவர்கள் உயிர் தப்பினர்.
Similar News
News March 13, 2026
கேஸ் சிலிண்டர்.. அரசின் புதிய அறிவிப்பு வெளியானது

சமையல் சிலிண்டர்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதால் மக்கள் பீதியடைய வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், இதுதொடர்பான செய்திகள் வெளியிடும் டிவி சேனல்கள் ஒரே வீடியோ/போட்டைவை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாமல், தேதி & நேரத்துடன் ஒளிபரப்ப வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், மாநில அரசுகள் மாவட்ட அளவில் சிலிண்டர் விநியோகத்தை கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
News March 13, 2026
அனுஷ்காவுக்கு டும் டும் டும்.. இவர்தான் மாப்பிள்ளை!

இந்திய சினிமாவின் தேவசேனா என வர்ணிக்கப்படும் நடிகை அனுஷ்காவிற்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அனுஷ்காவின் குடும்பத்தினருக்கு நெருக்கமான தொழிலதிபர் ஒருவருடன்தான் அவருக்கு திருமணம் நடைபெறவுள்ளதாம். இரு வீட்டாரின் சம்மதத்துடன் இந்த ஆண்டு இறுதிக்குள் இவர்களது திருமணத்தை நடத்தி முடிக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
News March 13, 2026
அமெரிக்கா – ஈரான் போரால் ரஷ்யாவுக்கு ஜாக்பாட்

USA-ஈரான் போரால் குறுகியகால நோக்கில் ரஷ்யா அதிக பலனடைந்திருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். *ஈரானுடன் போர் காரணமாக உக்ரைனுக்கு ஏவுகணைகள் கொடுப்பதை USA குறைத்துள்ளது. இது ரஷ்யாவுக்கு சாதகமானது. *ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு தேவை அதிகரித்துள்ளது, அதன் வருமானத்தை உயர்த்தும். *ஈரானின் Shahed ட்ரோன்கள் சப்ளை முடங்கினாலும், சீனாவின் உதவியால் அதை ரஷ்யா ஈடுசெய்துவிடும்.


