News May 25, 2024
பட்டா மாறுதல் – தமிழ்நாடு அரசு சிறப்பு நடவடிக்கை!

சென்னை தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் பட்டா மாறுதல் உள்ளிட்ட 26 சான்றிதழ்களை, 16 நாட்களுக்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாலுகா வாரியாக துணை ஆட்சியர் நிலையில் சிறப்பு அதிகாரிகளை நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளது. நடைமுறையை விரைவு படுத்தி கண்காணிக்க, ஒவ்வொரு தாலுகாவுக்கும் சிறப்பு அலுவலரை நியமிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் கடிதம் எழுதியுள்ளார்.
Similar News
News March 7, 2026
சென்னை: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்!

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம், ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை. <
News March 7, 2026
சென்னை: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு!

சென்னையில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். மிக முக்கியமாக ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் கட்டாயமாக பயன்படுத்த கூடாது. பயனுள்ள இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News March 7, 2026
டி-20 கிரிக்கெட் – மெரினாவில் நேரலை

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. நாளை (மார்ச்.8) குஜராத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி சென்னை மெரினா கடற்கரையில் பெரிய திரையில் நேரலை செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. மாலை 5-7 மணி வரை நாட்டுப்புற பாடல், அதைத்தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. ஷேர் பண்ணுங்க.


