News May 25, 2024

திண்டுக்கல்: புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்

image

பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககத்தின்கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வயதிற்கு மேற்பட்ட எழுதப்படிக்கத் தெரியாத நபர்களைக் கண்டறிந்து கல்வியறிவு வழங்கும் “புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-2027” ஐந்தாண்டுத்திட்டமானது கடந்த 2022-2023 கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தில் அனைவரும் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

Similar News

News March 11, 2026

திண்டுக்கல்: Spam Calls தொல்லையா? இனி END CARD!

image

திண்டுக்கல் மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க!

News March 11, 2026

வத்தலக்குண்டு: தட்டித்தூக்கிய அதிமுக Ex அமைச்சர்!

image

வத்தலக்குண்டு மற்றும் பட்டிவீரன்பட்டி பகுதிகளை சேர்ந்த ஓ.பி.எஸ். ஆதரவாளர்களான ரத்தினம், முத்துச்சாமி, மணிப்பிள்ளை, ஓ.இளங்கோவன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் தலைமையில் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில், அதிமுக துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான இரா. விஸ்வநாதன் முன்னிலையில் அவர்கள் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

News March 11, 2026

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை பதிவு

image

திண்டுக்கல் மாவட்ட காவல் காவல்துறை சார்பில் இணையதளத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் “உங்கள் செல்போன் எண்ணிற்கு பரிசுத்தொகை கிடைத்துள்ளதாக வரும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்.” பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என இந்த கார்ட்டூன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!