News May 25, 2024
இன்று கனமழை பெய்யும்

குமரி, தென்காசி, நெல்லை ஆகிய 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கும் என்றும், வரும் 28ஆம் தேதி வரை குமரி கடல் பகுதி, மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45-55 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.
Similar News
News March 11, 2026
வீட்டு சிலிண்டர் புக்கிங்கிலும் சிக்கல்

வளைகுடா போர் பதற்றத்தால் நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நேற்று முதல் வணிக சிலிண்டர் புக்கிங் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் புக்கிங்கிலும் சிக்கல் எழுந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. செல்போன் மூலம் சிலிண்டர் புக் செய்ய முயன்றால், ‘சுவிட்ச் ஆப்’ என பதில் வருவதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். உங்கள் பகுதியில் இதுபோன்ற பிரச்னை இருக்கிறதா?
News March 11, 2026
இதனால் தான் சுதீஷுக்கு MP சீட் கொடுத்தாரா பிரேமலதா?

திமுக கொடுத்த MP சீட்டை முதலில் மூத்த நிர்வாகி ஒருவருக்கு கொடுக்கலாம் என தேமுதிக பிளான் செய்ததாக கூறப்படுகிறது. இதன்மூலம் கட்சி மீதான நன்மதிப்பு கூடும் என பிரேமலதா கணக்கு போட்டாராம். ஆனால் குறுக்கே வந்த சுதீஷ் இத்தனை நாள் கட்சிக்காக உழைத்த தனக்கு MP சீட்டை வழங்கவில்லை எனில் கட்சியை விட்டே விலகுவேன் என முறையிட்டதாக பேசப்படுகிறது. இதனாலேயே அவருக்கு அந்த MP சீட் கொடுக்கப்பட்டது என்கின்றனர்.
News March 11, 2026
BREAKING: சிலிண்டர் விலை ₹4,000? அதிர்ச்சி

தமிழகத்தில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, சிலிண்டர் புக்கிங் நிறுத்தப்பட்டுள்ளதால் ஹோட்டல்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி சிலர், சிலிண்டர்களை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வணிக சிலிண்டர் ₹4,000-க்கும், தருமபுரியில் ₹3,000-க்கும் விற்கப்படுவதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.


