News May 25, 2024
மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்கவும்

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இறுதி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதுவரை 81,822 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு மேல் அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை. கடைசி சில மணி நேரமே இருப்பதால் மாறுதல் பெற விருப்பமுள்ள அனைத்து வகை அரசுப் பள்ளி ஆசிரியர்களும் எமிஸ் மூலம் விரைவாக விண்ணப்பிக்கவும்.
Similar News
News March 12, 2026
இலவசமாக வேலைக்கு ஆட்கள் எடுக்க சூப்பர் வாய்ப்பு!

‘ஆட்கள் தேவை’ என போர்டு வைத்தும் உங்கள் கடை அல்லது நிறுவனத்திற்கு பணியாளர்கள் கிடைப்பதில் சிரமமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம். எவ்வித கட்டணமுமின்றி WAY2NEWS உங்களுக்காக விளம்பரம் செய்கிறது. சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்கள் தங்களுக்கு தேவையான விளம்பரத்தை <
News March 12, 2026
TN-ல் பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே? விஜய் ஆவேசம்

தங்கள் கல்லாப்பெட்டி, கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனம் செலுத்தும் முதல்வரே, TN-ல் பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே என விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடியில் பள்ளி மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட செய்தி நெஞ்சை பதற வைப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இப்படி ஒரு ஆட்சி தேவையா? என மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டதாக தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
News March 12, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹1,200 குறைந்தது

<<19359319>>சர்வதேச சந்தையில்<<>> ஏற்பட்டுள்ள சரிவின் காரணமாக, இந்திய சந்தையில் தங்கம் விலை சவரனுக்கு ₹1,200 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹150 குறைந்து ₹14,970-க்கும், சவரன் ₹1,19,760-க்கும் விற்பனையாகிறது. கடந்த சில தினங்களாக ஏறுமுகத்திலிருந்த தங்கம் இன்று குறைந்துள்ளதால் தங்கம் வாங்க நினைத்தோர் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.


