News May 25, 2024

ராஜஸ்தான் வீரருக்கு அபராதம் விதிப்பு

image

SRH-க்கு எதிரான ஐபிஎல் Qualifier 2 போட்டியில், RR வீரர் ஷிம்ரன் ஹெட்மயருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 14ஆவது ஓவரில், அபிஷேக் ஷர்மா வீசிய பந்தில், ஹெட்மயர் போல்டாகி ஆட்டமிழந்தார். இதனால் விரக்தி அடைந்த அவர், கோபத்தில் தனது பேட்டால் ஸ்டம்பை அடித்து நொறுக்கினார். இது, ஐபிஎல் விதிப்படி குற்றம் ஆகும். இதனால், இப்போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 10% அபராதம் விதித்து பிசிசிஐ அவருக்கு உத்தரவிட்டது.

Similar News

News March 6, 2026

கிருஷ்ணகிரியில் இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink <>இந்த<<>> இணையதளங்களில் விண்ணப்பிங்க. ஷேர் பண்ணுங்க

News March 6, 2026

சர்ச்சைக்கு மத்தியில் விஜய் அறிவித்தார்

image

மாமல்லபுரத்தில் விஜய் தலைமையில் நாளை மகளிர் தின விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக, மகளிருக்கான திட்டங்கள் குறித்து அவர் அறிவிக்க உள்ளார். QR அனுமதிச் சீட்டு உள்ளவர்கள் மட்டும் நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என தவெக தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விஜய்யின் விவாகரத்து வழக்கு சர்ச்சைக்கு மத்தியில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

News March 6, 2026

போரில் ஈரானுக்கு உளவுத் தகவல்களை பகிரும் ரஷ்யா!

image

போரில் ஈரானுக்கு ரஷ்யா உதவி செய்வதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கூறுவதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க போர்க்கப்பல்கள், விமானங்கள் மற்றும் ரேடார்கள் பற்றிய உளவுத் தகவல்களை ரஷ்யா வழங்கி வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்தவும் ரஷ்யா உதவுவதாகக் தெரிகிறது.

error: Content is protected !!