News May 25, 2024
ரயிலில் கஞ்சா கடத்திய இரண்டு பேர் கைது

ஈரோடு ரயில் நிலையம் அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இரண்டு வட மாநில இளைஞர்களை சுற்றி வளைத்து மதுவிலக்கு போலீசார் கைது. மேலும் இவர்களிடமிருந்து 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கி உள்ள வட மாநிலத்தவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News March 5, 2026
ஈரோடு அருகே பதறவைக்கும் துயரம்!

ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அருகே பனங்காட்டுப்பாளையம் விவசாயி காமராஜின் தோட்டத்தில், காட்டுப்பன்றியை வேட்டையாட மர்ம நபர்கள் ‘அவுட்காய்’ (நாட்டு வெடி) வைத்துள்ளனர். அப்போது மேய்ச்சலில் இருந்த பசு மாடு அதனைத் தெரியாமல் கடித்ததில் வெடி விபத்து ஏற்பட்டு, மாட்டின் வாய் உருக்குலைந்தது. சம்பவம் குறித்து வனத்துறையினரும் போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, வெடி வைத்த மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் 3-ம் இடம் பிடித்து சாதனை!

மத்திய அரசின் 2025-26 கல்வி ஆண்டுக்கான இன்ஸ்பயர் விருது பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 2,336 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். இதில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 97 மாணவர்கள் இடம் பெற்று மாநில அளவில் 3-ம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். குறிப்பாக 45 அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வாகி தனியார் பள்ளிக்கு இணையான புத்தாக்க சிந்தனையை நிரூபித்துள்ளதாக மாவட்ட கலெக்டர் கந்தசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.