News May 25, 2024
பள்ளிகள் திறப்பு: பெற்றோர் செல்போன் எண் தெரிவிக்கவும்

ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை நேற்று அறிவித்தது. இதற்கிடையில், அனைத்து மாணவர்களின் பெற்றோர் எண்களுக்கு ஒரு OTP அனுப்புவதன் மூலம், அவர்களின் செல்போன் எண்களைச் சரி பார்க்கின்றனர். பல பெற்றோருடைய செல்போன் எண்கள் தவறானதாகவும், சில எண்கள் உபயோகத்தில் இல்லாமலும் உள்ளன. எனவே, பெற்றோர்கள் சரியான செல்போன் எண்ணை பள்ளிக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News March 19, 2026
வாட்ஸ்ஆப் Group admin தான் இதற்கு பொறுப்பு: ECI

பலரால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப்பில் தேர்தல் பிரசாரங்களை கட்சிகள் முன்னெடுத்துள்ளன. இந்நிலையில், வாட்ஸ்ஆப் குழுக்களில் கட்சிகளின் செயல்பாட்டை கண்காணிக்க ECI மாவட்டந்தோறும் குழுக்களை அமைத்துள்ளது. தேர்தல் விதிகள் மீறப்படுவது தெரிந்தால், குழுவின் அட்மின் மீதே நடவடிக்கை பாயும் என்றும் ECI எச்சரித்துள்ளது. எனவே, Admin Only என்ற நிலைக்கு பல வாட்ஸ்ஆப் குரூப் மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
News March 19, 2026
FLASH: வேகமாக குறையும் தங்கம் விலை.. இன்ப அதிர்ச்சி

சர்வதேச சந்தையில் தங்கம் விலை தலைகீழாக குறைந்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) 165 டாலர்கள்(இந்திய மதிப்பில் ₹15,396) குறைந்து 4,725 டாலராகவும், வெள்ளி 1 அவுன்ஸ் 7 டாலர்கள் குறைந்து 71 டாலருக்கும் விற்பனையாகிறது. இதன் தாக்கத்தால் இந்திய <<19423249>>சந்தையில் காலை போலவே<<>>, மாலை நேர வர்த்தகத்திலும் தங்கம் விலை கணிசமாக குறையும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
News March 19, 2026
மீண்டும் அப்பா ஆனார் தினேஷ் கார்த்திக்!

தினேஷ் கார்த்திக் – தீபிகா பல்லிக்கல் தம்பதிக்கு 3-வது குழந்தை பிறந்துள்ளதை அவர்கள் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். பிறந்த பெண் குழந்தைக்கு ராஹா என பெயர் சூட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். கிரிக்கெட்டரான தினேஷ், ஸ்குவாஸ் பிளேயரான தீபிகாவை கடந்த 2015, ஆக.25-ல் திருமணம் செய்தார். இத்தம்பதிக்கு 2021-ல் கபிர் & ஜியான் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர்.


