News May 25, 2024

கிருஷ்ணகிரி: புகையிலை கடத்திய 2 பேர் கைது

image

ஓசூர் டவுன் போலீசார் நேற்று முன்தினம் பேருந்து நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற 2 பேரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்களது பையில் 3 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து விசாரணையில் அவர்கள் நெல்லை தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த நெல்லையப்பன் (46), அருண்குமார் (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைதுசெய்தனர்.

Similar News

News October 19, 2025

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் மழை பெய்யும் நேரங்களில் மின் கம்பங்களின் அருகில் நிற்பதையோ கீழே கிடக்கும் மின் கம்பிகளின் அருகே செல்வதையோ கட்டாயம் தவிர்க்க வேண்டும் மற்றும் இடி மின்னல் நேரத்தில் வீட்டில் உள்ள அதிக மின் திறன் கொண்ட மின்சார உபகரண பொருட்களை அனைத்து வைக்கும் வேண்டும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.

News October 18, 2025

கிருஷ்ணகிரி மாவட்ட இரவு நேர ரோந்து பணி விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (18.10.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News October 18, 2025

கிருஷ்ணகிரி மக்களே மழை காலத்தில் கரண்ட் கட்டா..?

image

கிருஷ்ணகிரி மக்களே தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதியில் மின் விநியோகத்தில் பிரச்சனை எழும். அதனை சரி செய்ய லைன்மேனை நேரில் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் உடனடியாக லைன் மேன் வருவார். இதை உடனே எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!