News May 25, 2024

தினமும் ஆய்வு செய்யும் வேலூர் ஆட்சியர்

image

வேலூர் மாவட்டம் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வேலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தை மாவட்டத் தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலெட்சுமி தினமும் ஆய்வுசெய்து வருகிறார். அந்த வகையில் நேற்று (மே 24) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Similar News

News March 18, 2026

வேலூர்: விரல் நுனியில் வங்கி விவரங்கள்!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News March 18, 2026

வேலூர்: நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்!

image

காட்பாடி கரசமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தமீம் அன்சாரி (33). டிராவல்ஸ் ஏஜென்சி வைத்துள்ளார். இவர் தனது மனைவியுடன் நேற்றிரவு வேலூருக்கு காரில் வந்துள்ளார். வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே வந்த போது கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. உடனே தமீம் அன்சாரி காரை சாலையின் நடுவிலேயே நிறுத்திவிட்டு காரில் இருந்து இருவரும் இறங்கி ஓடினர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

News March 18, 2026

நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் ஆவேசம்: மத்திய அரசு ‘பதில்’!

image

வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கான பயிற்சி (CRMI) இடங்கள் குறைக்கப்பட்டுள்ளதா என வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த மத்திய இணை அமைச்சர் அனுப்பிரியா படேல், பயிற்சி இடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார். மேலும்,மாணவர்களின் இடர்பாடுகளைத் தீர்க்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் அவர் விளக்கமளித்தார்.

error: Content is protected !!