News April 13, 2026
நல்லா படித்த குழந்தை இப்போ Dull-ஆ படிக்குதா?

நன்றாக படித்து வந்த உங்கள் குழந்தை திடீரென குறைவான மதிப்பெண் வாங்குகிறார்களா? அவர்கள் படிப்பில் கவனம் செலுத்த இவற்றை செய்யலாம். ▶குழந்தையை முட்டாள் என கூற வேண்டாம் ▶எப்போதும் 1st Rank எடுக்க சொல்லாதீர்கள் ▶ படிக்கும்போது அவர்களின் கவனத்தை சிதறடிக்கும் சாதனங்களை ஒதுக்கிவையுங்கள் ▶பள்ளியில் ஏதேனும் பிரச்னையா என கேளுங்கள் ▶விளையாட அனுப்புங்கள் ▶ சின்ன சின்ன பாராட்டுகளை வழங்குங்கள். SHARE.
Similar News
News April 20, 2026
உள்கட்சி பிரச்னையால் வெற்றி பாதிக்கக் கூடாது: திருமா

விசிகவின் உள்கட்சி பிரச்னையால் தோழமை கட்சிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக் கூடாது என நிர்வாகிகள், தொண்டர்களை திருமா அறிவுறுத்தியுள்ளார். ஓட்டுச்சாவடி வாரியாக தனித்தனி குழுக்களை உருவாக்கி செயல்பட்டால், அது தோழமை கட்சிகளின் வெற்றியை பாதிக்கும் என அவர் எச்சரித்துள்ளார். முன்னதாக, சில தொகுதிகளில் விசிக-காங்., மோதல் & பிரேமலதாவை விசிகவினர் எதிர்ப்பது போன்ற சம்பவங்கள் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.
News April 20, 2026
BREAKING: அறிவித்தார் விஜய்..

தவெகவின் முழு தேர்தல் அறிக்கை இன்று மாலை 3 மணிக்கு வெளியிடப்படும் என விஜய் அறிவித்துள்ளார். தனியார் ஹோட்டலில் நடைபெறும் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் தவெகவின் 800 நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. QR கோடு அனுமதி சீட்டு உள்ளவர்களை தவிர்த்து, கர்ப்பிணிகள், சிறுவர்கள், பள்ளி மாணவர்கள், முதியவர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
News April 20, 2026
சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.


