News May 25, 2024
உமர் ஒலியுல்லா தர்காவில் கந்தூரி விழா

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் உமர் ஒலியுல்லா தர்காவில் கந்தூரி விழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு முதல் நாள் போர்வை போர்த்தும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து உலக அமைதிக்காகவும் நாட்டில் நல்லாட்சி மலரவும் பிரார்த்தனைகள் செய்யப்பட்டது. இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
Similar News
News September 9, 2025
கோவில்பட்டி: வீடியோ காலில் பேசிவிட்டு தற்கொலை

கோவில்பட்டி எஸ்.எஸ். நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (35). இவரது மனைவி காயத்ரி துபாயில் வேலை பார்த்து வருகிறார். இன்று அதிகாலை 2 மணியளவில் சுரேஷ் அவரது மனைவி காயத்ரியுடன் வீடியோ காலில் பேசியுள்ளார். அப்போது மனையுடன் சண்டை போட்டுவிட்டு தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறி போனை ஆப் செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 9, 2025
BREAKING தூத்துக்குடிக்கு வரும் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செப்.13 முதல் டிச.20 வரை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள உள்ளார். அதன்படி செப்.13 அன்று திருச்சியில் தொடங்கி அக்.11ம் தேதி அன்று நெல்லை, குமரி, தூத்துக்குடி மக்களை சந்திக்க உள்ளார். இதற்காக பாதுகாப்பு கோரி காவல்துறையினரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
News September 9, 2025
தூத்துக்குடியில் வேலை வாய்ப்பு – ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு செயல்படும் தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுடன் இணைந்த குழந்தைகள் உதவி மையத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படியில் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளது. இதில் ஊதியமாக ரூ.18,000 முதல் ரூ.21,000 வரை வழங்கப்படும். இதில் விண்ணப்பிக்க, கூடுதல் விவரங்களை <