News May 25, 2024
காமராஜரின் பொன்மொழிகள்

✍பிறர் உழைப்பைத் தன் சுயநலத்துக்குப் பயன்படுத்துவதே உலகின் மிகவும் கேவலமான செயலாகும். ✍ உங்கள் குறைகளை, நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் வளர்ச்சியின் அடையாளம். ✍நூறு அறிவாளிகளுடன் மோதுவதைவிட ஒரு மூடனோடு மோதுவது சிரமமானது. ✍படித்த சாதி, படிக்காத சாதி என்றொரு சாதி உண்டாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ✍சட்டமும் விதிமுறைகளும் மக்களுக்காகவே ஏற்பட்டவை; சட்டம் & விதிமுறைகளுக்காக மக்கள் இல்லை.
Similar News
News March 15, 2026
BREAKING: செங்கல்பட்டு- சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி!

செங்கல்பட்டு மாவட்டம், நாவலூர் அடுத்த சாமுண்டீஸ்வரி நகரில், இன்று காலை கேஸ் சிலிண்டர் வெடித்ததில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விளையாடி கொண்டிருந்த தீரன், கிருஷிகா என்ற இரண்டு குழந்தைகள் பரிதாபமாக பலியாகினர். மேலும் பெற்றோர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உட்பட 7 பேர் படு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 15, 2026
சிலிண்டர் தட்டுப்பாடு.. அம்மா உணவகம் மவுசு அதிகரிப்பு

வணிக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடால் சில ஹோட்டல்களில் மெனுக்கள் குறைக்கப்பட்டுள்ளதுடன், விலையும் சற்று உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை உள்பட முக்கிய நகரங்களிலுள்ள அம்மா உணவகங்களில் 25 – 50% வரை வாடிக்கையாளர்களின் வருகை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், இங்கு கேஸ் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
News March 15, 2026
விஜய்க்காக காத்திருக்கிறாரா இபிஎஸ்?

விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவருவதற்காக, இதுவரை தொகுதிப் பங்கீடு குறித்து EPS பேசவில்லை என கூறப்பட்டது. இதற்கிடையில், இளம், நடுத்தர வயது வாக்காளர்கள் திமுகவை விட தவெகவிற்கே அதிகம், இத்தேர்தலில் விஜய் கிங் மேக்கராக இருப்பார் என நேற்று வெளியான IPDS கருத்துக்கணிப்பில் கூறப்பட்டது. தற்போது விஜய் டெல்லியில் இருக்கும் சூழலில் 80 தொகுதி ஆஃபருடன் ADMK கூட்டணியில் TVK இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


