News May 25, 2024

டி20 WC: பிராண்ட் தூதராக ஷாகித் அப்ரிடி

image

டி20 உலகக் கோப்பைக்கான போட்டித் தூதராக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடியை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உலகக் கோப்பை விளம்பர நடவடிக்கைகளில் அப்ரிடி பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இத்தொடரின் தூதராக யுவராஜ் சிங், கிறிஸ் கெயில், உசைன் போல்ட் ஆகியோர் அறிவிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.

Similar News

News March 11, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News March 11, 2026

ஈரான் உயர் தலைவர் மொஜ்தபா கமேனி காயமா?

image

ஈரானின் புதிய உயர் தலைவர் மொஜ்தபா கமேனி, US தாக்குதலில் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டில் உள்ள ஒரு டிவி சேனல் அவரை ‘ரமலானின் சான்பாஸ்’ (காயமடைந்த போர்வீரன்) என்று குறிப்பிட்டதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. மொஜ்தபா புதிய உயர் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், உயர் தலைவர் தாக்குதலில் காயமடைந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

News March 11, 2026

சிலிண்டர் தட்டுப்பாடு என CM சொல்வது பொய்: நயினார்

image

தமிழகம் உள்பட எங்குமே சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருச்சியில் பேசிய அவர், சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக CM ஸ்டாலின் சொல்வது முழுக்க முழுக்க பொய் என்றார். ஓட்டல்களில் உணவு வகைகள் குறைக்கப்பட்டதற்கும், சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கும் சம்பந்தம் இல்லை; கேஸ் தேவைப்பட்டால் ஒரு கேஸ் டீலர் என்ற முறையில் தானே அதனை வழங்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!