News May 25, 2024
27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்

‘மின்சார கனவு’ (1997) படத்திற்குப் பிறகு, நடிகர் பிரபுதேவா & நடிகை கஜோல் இருவரும் புதிய படம் ஒன்றில் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர். தெலுங்கு இயக்குநர் சரண் தேஜ் பாலிவுட்டில் இயக்கும் இந்தப் படத்தில் நசிருதீன் ஷா, சம்யுக்தா மேனன், ஆதித்யா ஷீல் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படத்தின் டீசரை விரைவில் வெளியிட படக்குழு தயாராகி வருகிறது.
Similar News
News September 16, 2025
செவ்வாய்க்கிழமையும் சக்தி வாய்ந்த முருகன் வழிபாடும்!

தொடர்ந்து 9 செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்து முருகனை வழிபடுவது, வாழ்வில் செல்வத்தை வாரி வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலையில் நீராடி, முருக பெருமானை வழிபடுங்கள். மாலை வரை பால், பழச்சாறு மட்டுமே அருந்தி விரதமிருந்து முருகனின் பெயரை உச்சரியுங்கள். மாலையில், பிரசாதம் செய்து, நெய்வேத்தியம் படைத்து முருகனை வழிபட்டு விரதத்தை முடியுங்கள். இன்றே தொடங்குங்கள். SHARE IT.
News September 16, 2025
BREAKING: நீக்கப்படுகிறாரா செங்கோட்டையன்?

TTV, OPS-க்கு ஆதரவாக செயல்பட்டால், அதிமுகவில் இருந்து உடனே நீக்குவது EPS வழக்கம். இதற்கிடையில் செங்கோட்டையனுடன் பேசி வருவதாக OPS கூறியிருந்தார். இந்நிலையில், சிலபேரை கைக்கூலியாக வைத்துக்கொண்டு ஆட்டம் போடுகின்றனர். கைக்கூலிகள் யாரென்று அடையாளம் கண்டுவிட்டோம்; அதற்கு விரைவில் முடிவு கட்டப்படும் என்று EPS சூளுரைத்துள்ளார். இதனால், செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
News September 16, 2025
பெண் சூப்பர் ஹீரோ கல்யாணி பிரியதர்ஷன்

‘லோகா’ திரைப்படம் மூலம் இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோவாக களமிறங்கி உள்ளார் கல்யாணி பிரியதர்ஷன். படத்தில் வாம்பயராக மிரட்டியுள்ள கல்யாணியின் சமீபத்திய புகைப்படங்கள் மேலே இணைக்கப்பட்டுள்ளன. போட்டோக்களை ஒவ்வொன்றாக swipe செய்து பாருங்க. பிடித்திருந்தால் கமெண்ட் பண்ணுங்க.