News May 25, 2024

இவிஎம் பதிவுகளை 3 ஆண்டுகள் பாதுகாக்க வேண்டும்

image

இவிஎம் பதிவுகளை 2-3 ஆண்டுகள் பாதுகாக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் பேசிய அவர், “வாக்கு எண்ணிக்கை முடிவதற்குள், வாக்குகள் எப்படி பதிவானது என்பதை மக்களுக்கு தெரிவிப்பதில் தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டக்கூடாது. வாக்குகள் எண்ணும் முன் அனைத்து கட்டங்களின் பதிவுகளையும் பகிரங்கப்படுத்த வேண்டும்” என்றார்.

Similar News

News August 17, 2025

அக்டோபர் 1 முதல் Gpay, Phonepeல் இந்த வசதி கிடையாது!

image

அவசர பணத்தேவை இருக்கும்போது, நண்பர்களிடம் போன் பண்ணி கடன் கேட்க தயங்குபவர்கள் கூட Gpay, Phonepe-ல் ஈசியாக MONEY REQUEST கொடுத்து வந்தனர். பணம் அனுப்பும் பகுதியிலுள்ள REQUEST அம்சம் மூலம் இதனை செய்யலாம். UPI பரிவர்த்தனைகளில் இந்த வசதியை அக். 1 முதல் நிறுத்த NPCI முடிவு செய்துள்ளது. பரிவர்த்தனை பாதுகாப்பை வலுப்படுத்தி மோசடிகளை தடுக்கவே இந்த முடிவாம். இனி டிஜிட்டலில் கடன் கேட்க முடியாது நண்பர்களே!

News August 17, 2025

நாளை டிரம்ப்பை சந்திக்கும் ஜெலன்ஸ்கி

image

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் நாளை டிரம்ப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து ரஷ்ய அதிபர் புடினுடன் கடந்த 15-ம் தேதி டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், நாளை இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. போர் நிறுத்தம் தொடர்பாக எந்த உடன்படிக்கையும் எட்டப்படாத நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

News August 17, 2025

கடைசி மூச்சு வரை.. CP ராதாகிருஷ்ணன் நெகிழ்ச்சி

image

கடைசி மூச்சு வரை தேசத்திற்காக கடினமாக உழைப்பேன் என துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள CP ராதாகிருஷ்ணன் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். PM மோடி, அமித்ஷா, JP நட்டா உள்ளிட்டோருக்கு நன்றி கூறியுள்ள அவர், தேசத்திற்கு சேவை செய்ய கிடைத்த வாய்ப்பை சொல்ல வார்த்தைகள் இல்லை எனவும் நெகிழ்ச்சி அடைந்துள்ளார். NDA-வுக்கு பெரும்பான்மை உள்ளதால் CP ராதாகிருஷ்ணனின் வெற்றிக்கு அதிக வாய்ப்புள்ளது.

error: Content is protected !!