News May 24, 2024

பாஜக மீது மக்கள் அதிருப்தி

image

மக்களவைத் தேர்தலில் பாஜக 300 இடங்களைத் தாண்டுவது என்பது கடினமான விஷயம் என காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கூறியுள்ளார். ஐந்து கட்டத் தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் போன்றவற்றால் மக்கள் பாஜக மீது அதிருப்தியில் உள்ளதாகக் கூறிய அவர், காங்., முன்பைவிட சிறந்த நிலையில் இருப்பதாக கூறினார். மேலும், காங்., அதிக இடங்களில் வெற்றிபெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

Similar News

News March 11, 2026

CINEMA 360°: ஒரே படத்தில் இணையும் ரஜினி – ஷாருக்

image

*சாய் பல்லவியின் ‘ஏக் தின்’ பாலிவுட் பட டிரெய்லர் இன்று வெளியாகிறது. *ஆந்திரா DCM பவன் கல்யாணின் ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. *சமுத்திரக்கனி, GVM நடித்துள்ள ‘கார்மேனி செல்வம்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. *சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானும் ’ஜெயிலர் 2’ படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 11, 2026

மார்ச் 11: வரலாற்றில் இன்று

image

*1983 – பாகிஸ்தான் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக சோதித்தது. *1999 – இன்ஃபோசிஸ், இந்தியாவின் முதலாவது வணிக நிறுவனமாக நாஸ்டாக் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. *1927 – இந்திய புற்றுநோய் மருத்துவ நிபுணர் வி. சாந்தா பிறந்த தினம். *1992 – நடிகை மஞ்சிமா மோகன் பிறந்த தினம். *2013 – தமிழறிஞர் வே. தில்லைநாயகம் நினைவு தினம்.

News March 11, 2026

எத்தனை முறை PM வந்தாலும் வெற்றி திமுகவுக்கே: சுதீஷ்

image

ராஜ்யசபா உறுப்பினராக தேர்வான தேமுதிகவின் எல்.கே.சுதீஷ், அறிவாலயத்தில் CM ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த கூட்டணியால் தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்; இது தேமுதிகவினர் விரும்பிய கூட்டணி என்றார். அத்துடன் PM மோடி எத்தனை முறை தமிழகத்துக்கு வந்தாலும், வரும் தேர்தலில் திமுக கூட்டணிதான் அமோக வெற்றி பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!