News May 24, 2024
பெங்களூரு குண்டுவெடிப்பில் மேலும் ஒருவர் கைது

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த மார்ச் 1 ஆம் தேதி குண்டு வெடித்ததில் 9 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கை விசாரித்துவரும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 4 பேரை கைது செய்திருந்த நிலையில், இன்று மேலும் ஒருவரை கைது செய்துள்ளனர். கடந்த 3 நாள்களாக 4 மாவட்டங்களில் NIA சோதனை நடத்திவந்த நிலையில், ஹூப்ளியில் அகமது மிஸ்ரா என்பவரை கைது செய்துள்ளனர்.
Similar News
News September 16, 2025
மதமென பிரிந்தது போதும்.. மனதை தொட்ட நிகழ்வு

இந்துவாக பிறந்து, தேவாலயத்தில் வளர்ந்து, இஸ்லாமிய நபராக வாழ்ந்த கதையை ‘சிட்டிசன்’ படத்தில் பார்த்திருப்போம். அதேபோல்தான், கேன்சரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், தனது இறுதிச்சடங்கை இந்து முறைப்படி செய்ய விருப்பப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக யாரும் இல்லாத நிலையில், இஸ்லாமியரான சஃபீர் என்பவர், கிறிஸ்தவ மறுவாழ்வு மையத்தில் இறுதிச்சடங்கை செய்துள்ளார். இந்த மனதை வருடும் சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.
News September 16, 2025
திராவிட கட்சிகள்: அன்று முதல் இன்று வரை

திராவிடர் கழகத்திலிருந்து (1944), திமுக (1949), திமுகவிலிருந்து தமிழ் தேசியக் கட்சி (1949), அதிமுக (1972), மதிமுக (1993) என உருவானது. இவற்றில் திமுக, அதிமுக ஆகியவை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளன. இந்நிலையில், மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா புதிய கட்சியை தொடங்கியுள்ளார். திராவிட கட்சிகளின் செயல்பாடுகளுக்கு உங்கள் மார்க் எவ்வளவு? ஏன்? என்று கமெண்ட்டில் சொல்லுங்க.
News September 16, 2025
செப்டம்பர் 16: வரலாற்றில் இன்று

*சர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினம். *1921 – சிங்கப்பூரின் முதல் பிரதமரும், அந்நாட்டில் தமிழை சிறப்பித்தவருமான லி குவான் யூ பிறந்தநாள். *1923 – எழுத்தாளர் கி. ராஜநாராயணன் பிறந்தநாள். *1961 – விண்வெளி ஆய்வு நிறுவனத்தை பாகிஸ்தான் நிறுவியது. *1976 – தென்னிந்திய திரைப்பட நடிகை மீனா பிறந்தநாள். *2002 – விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்ரமசிங்கே அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தாய்லாந்தில் ஆரம்பமாயின.