News May 24, 2024

இர்பான் மீது ஏன் நடவடிக்கை இல்லை – ஜெயக்குமார்

image

யூடியூபர் இர்பான் தனது மனைவியின் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை வெளியிட்டார். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “இர்பான், உதயநிதிக்கு நெருங்கியவர் என்பதால் அவர் மீது எந்த நடவடிக்கையும் பாயவில்லை. ஆனால், சாமானிய மக்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு இருந்தால் கைது, குண்டாஸ் என வழக்கு மேல் வழக்கு போட்டிருப்பார்கள் ” என கூறினார்.

Similar News

News November 25, 2025

சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று (24.11.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

News November 24, 2025

கார்த்திகை தீபம் – சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு டிச.02, 03 அன்று அதிநவீன சொகுசு குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், திருவண்ணாமலையில் நடைபெறும் பௌர்ணமியை முன்னிட்டு சென்னையிலிருந்து 160 குளிர்சாதன மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை, படுக்கை வசதியுடன் கூடிய பேருந்துகள் 03 மற்றும் 04 டிசம்பர் 2025 அன்று இயக்கப்படுகின்றன. www.tnstc.in மற்றும் TNSTC official app மூலம் முன்பதிவு செய்யலாம்.

News November 24, 2025

சென்னையில் ரூ.50கோடி ஜிஎஸ்டி முறைகேடு

image

சென்னையில் ரூ.50 கோடி அளவிற்கு ஜிஎஸ்டி ஏய்ப்பு கண்டறியப்பட்டது என வடசென்னை ஜிஎஸ்டி ஆணையரகம் தெரிவித்துள்ளது. சென்னையில் 12 போலி நிறுவனங்கள் மூலம் ரூ.50 கோடி வரி ஏய்ப்பு ஒருவரை ஜிஎஸ்டி அதிகாரிகள் கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணையில், 90 போலி நிறுவனங்களைத் தொடங்கி நடத்தி வந்தது தெரியவந்துள்ளது. மேலும் 196 சிம் கார்ட் கவர்கள் மற்றும் சிம் கார்டுகள், 42 காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!