News May 24, 2024
சங்ககிரி அருகே 2 குழந்தையுடன் தாய் தற்கொலை

சேலம், சங்ககிரி அக்ரஹாரம் ஊராட்சி பகுதியை சேர்ந்த ஷில்பா என்கிற சுகமதி தனது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, தனது இரு பெண் குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷமருந்தி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சங்ககிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழக்குப்பதிவுச் செய்த சங்ககிரி காவல்துறையினர் கணவர் கோகுலிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News April 21, 2025
சேலம்: TNPSC குரூப் 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு!

சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (ஏப்.22) காலை 09.30 மணிக்கு டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கான இலவச சிறப்பு மாதிரி தேர்வுகள் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 2 புகைப்படம், ஆதார் அட்டை நகலுடன் வர வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 0427- 2401750 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!
News April 21, 2025
எர்ணாகுளம்-பாட்னா இடையே சிறப்பு ரயில்

எர்ணாகுளம்-பாட்னா சிறப்பு ரயில் (06085) வரும் ஏப்ரல் 25, மே 2, 9, 16, 23, 30-ம் தேதிகளில் (வெள்ளிக்கிழமை தோறும்) இயக்கப்படுகிறது. எர்ணாகுளத்தில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு அடுத்தநாள் அதிகாலை 3.25க்கும், திருப்பூருக்கு அதிகாலை 4.15க்கும், ஈரோட்டிற்கு அதிகாலை 5.05க்கும் வந்து சேலத்திற்கு காலை 6.12மணிக்கு வந்தடைகிறது என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News April 21, 2025
கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் ஆறகழூர் அஷ்டபைரவர் கோயில்

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே ஆறகளூரில் அமைந்துள்ளது காமநாதீஸ்வரர் கோயில். மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் கால பைரவரை வணங்கினால், கடன் பிரச்சனைகள் நீங்குமாம். அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது நம்பிக்கை. கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.