News May 24, 2024
வள்ளியூரில் மூன்று அரசு பேருந்துகளுக்கு அபராதம்

தமிழகத்தில் அரசு பேருந்தில் போலீசார் கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டுமென நடத்துனர்கள் கூறி வருவதால் ஆங்காங்கே போலீசார் அரசு பேருந்துகளுக்கும் அபராதம் விதித்து வருகின்றனர். இந்த நிலையில் நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே மூன்று அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு சீட் பெல்ட் அணியவில்லை என வள்ளியூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தலா ரூ.500 இன்று அபராதம் விதித்துள்ளார்.
Similar News
News March 7, 2026
நாங்குநேரி சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது

நாங்குநேரி அருகே பெரும்பத்து பஜாரில் கடந்த 2ம் தேதி இரவு 3 பைக்குகளில் வந்த கும்பல் ரோட்டின் அருகே டீக்கடையில் நின்ற மக்களை சரமாரியாக அறிவாளால் வெட்டியது. இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.இந்த சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய மஞ்சள் குளத்தை சேர்ந்த மகாராஜன் என்பவரை தற்போது போலீசார் கைது செய்தனர்.
News March 7, 2026
தபால் வாடிக்கையாளர்கள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

பாளையங்கோட்டை தலைமை தபால் அலுவலகத்தில் மார்ச்.10 அன்று காலை 11 மணிக்கு வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. நெல்லை, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் பகுதி தபால் சேவை வாடிக்கையாளர்கள் பங்கேற்று குறைகள், ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என நெல்லை அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.