News May 24, 2024
G.O.A.T படத்தின் BTS புகைப்படம் வைரல்

வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகி வரும் ‘G.O.A.T’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே, VFX, டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடெக்ஷன் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் ஒன்றாக அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Similar News
News March 12, 2026
போரின் தாக்கம்.. சிமென்ட் விலை உயர வாய்ப்பு!

ஈரான்-இஸ்ரேல் போரின் தாக்கம் இந்தியாவில் சிமென்ட் துறையையும் பாதித்துள்ளதாக ‘எலாரா கேபிடல்’ நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 15 நாள்களில், கச்சா எண்ணெய் விலை 39%, நிலக்கரி 14% அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளது. சிமென்ட் தயாரிப்புக்கான எரிபொருள் விலைகள் அதிகரித்து வருவதால், இதனை ஈடுசெய்ய சிமென்ட் மூட்டை சுமார் ₹6 வரை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
News March 12, 2026
FLASH: சர்வதேச சந்தையில் தங்கம் விலை பெரிய சரிவு!

சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் பெரிய அளவில் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் $80(இந்திய மதிப்பில் ₹7,375) குறைந்து $5,150 ஆக உள்ளது. அதேபோல், வெள்ளி விலை 1 அவுன்ஸ் $4 குறைந்து $85 ஆக நீடிக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் இந்திய சந்தையில் இன்று தங்கம் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
News March 12, 2026
தமிழ்நாட்டை ATM-ஆக நினைக்கும் திமுக: PM மோடி

தமிழ்நாட்டின் வளங்களை ஒரு குடும்பம் கொள்ளை அடித்துக் கொண்டிருப்பதாக திமுகவை PM மோடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற NDA பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திமுகவை மக்கள் ஆட்சிக்கு கொண்டு வந்தார்கள், ஆனால் அவர்கள் தமிழ்நாட்டை ATM போல் நினைத்து சுரண்டுவதாக கூறினார். அமைச்சர்கள் மாறலாம், MLA-க்கள் மாறலாம் ஆனால், அதிகாரம் மட்டும் ஒரு குடும்பத்திடம் சிக்கித் தவிப்பதாக சாடினார்.


