News May 24, 2024
பாக்., ஊடகவியலாளருக்கு ரெய்னா பதிலடி

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024 தொடருக்கான தூதுவராக ஷாஹித் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டு, சுரேஷ் ரெய்னாவை பாக்., ஊடகவியலாளர் ஒருவர் தனது X பக்கத்தில் கிண்டல் செய்திருந்தார். அதற்கு பதிலளித்துள்ள ரெய்னா, தான் ஐசிசி தூதுவராக இல்லாவிட்டாலும், தன் வீட்டில் 2011 உலகக்கோப்பை இருப்பதாகவும், மொஹாலியில் நடந்த அரையிறுதிப் போட்டியில் தோற்றது தங்களுக்கு ஞாபகம் இருக்கும் எனவும் பதிலடி கொடுத்தார்.
Similar News
News November 23, 2025
தஞ்சை: வெளுக்க போகும் மழை – எச்சரிக்கை!

தென்கிழக்கு வாங்க் கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என்றும், இது வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தஞ்சை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.23) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News November 23, 2025
கருவுறாமை பிரச்னையா? இதோ அற்புத மூலிகை!

சதாவரி மூலிகை ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்க உதவுவதாக சித்தா டாக்டர்கள் கூறுகின்றனர். இந்த வேரின் சாறை காலை, மதியம், மாலை என 4 ஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் 2 ஸ்பூன் சர்க்கரை கலந்து குடிக்கலாம். இதனை தொடர்ந்து 5 நாள்களுக்கு செய்துவர மாதவிடாய் பிரச்னைகள், மன அழுத்தம், கருவுறாமை, செரிமான கோளாறு கூட சரியாகும் என்கின்றனர். இந்த அற்புதத்தை அனைவரும் அறிய, SHARE THIS.
News November 23, 2025
விஜய்க்கு இது நல்ல பாடம்: தமிழிசை

பிஹாரில் ஜன் சுராஜுக்கு ஏற்பட்ட படுதோல்வி, விஜய்க்கும் சீமானுக்கு ஒரு பாடம் என தமிழிசை கூறியுள்ளார். பல மாநில தேர்தல்களில் வெற்றியை நிர்ணயித்துக் கொடுத்த அரசியல் விற்பன்னர் PK-வுக்கே மக்கள் துணையில்லை எனவும் வெறும் விளம்பரமோ, அலங்கார அரசியலோ வேலைக்கு ஆகாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், மக்களோடு பயணித்தால் மட்டுமே அவர்கள் உங்களை திரும்பிப் பார்ப்பார்கள் எனவும் அவர் பேசியுள்ளார்.


