News May 24, 2024
ரகளையை தட்டிக்கேட்ட டீக்கடைக்காரருக்கு கத்தி குத்து

முத்தியால்பேட்டை சேர்ந்த பிரபாகரன் இவர் செஞ்சி சாலை சந்திப்பில் டீக்கடை நடத்தி வருகிறார். இன்று டீக்கடை முன்பு போதையில் வாலிபர் தகராறு செய்தார். பிரபாகரன் அந்த வாலிபரை தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த அவர் கத்தியால் பிரபாகரன் கழுத்தில் குத்தினார். பிரபாகரனை சிகிச்சைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர். தகவலறிந்த பெரியகடை போலீசார் அங்கு வந்து வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 11, 2026
புதுச்சேரி: தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி மாநில வக்பு வாரிய நிர்வாக சபைக்கு ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக அமைப்புகளை சேர்ந்த நபர்களை உறுப்பினர்களாக நியமித்ததை எதிர்த்து காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில் 300க்கும் மேற்பட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் கலந்து கொண்டனர்.
News March 11, 2026
புதுவை: தாய் கண்டித்ததால் மகன் தற்கொலை

காரைக்கால், கீழ காசாக்குடியைச் சேர்ந்தவர் வேம்பு. இவரது மூத்த மகன் ராகவன், கோட்டுச்சேரி மெக்கானிக் கடை ஒன்றில் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக குடி போதையில் இருந்த ராகவனை, அவரது தாய் வேம்பு கண்டித்ததால் மனமுடைந்த ராகவன் வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News March 11, 2026
புதுச்சேரி: முதலமைச்சரின் முக்கிய அறிவிப்பு

புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நேற்று நடைபெற்ற விழாவில் பேசிய புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, “மாணவர்களுக்கு காலணி (ஷூ) மற்றும் புத்தகப்பை வழங்குவதற்குப் பதிலாக, அவர்களின் வங்கி கணக்கில் ரூ.1000 நேரடியாக செலுத்தப்படும். மாணவர்களுக்கு தேவையான பொருட்களை அவர்கள் விருப்பப்படி வாங்கிக்கொள்ளும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்று அறிவித்தார்.


