News May 24, 2024
திருவள்ளுவருக்கு காவிச் சாயமா? அதிமுக எதிர்ப்பு

காவி நிறத்தில் திருவள்ளுவர் புகைப்படம் வெளியானதற்கு அதிமுக நிர்வாகி வைகை செல்வன் கண்டனம் தெரிவித்துள்ளார். வான்புகழ் கொண்ட வள்ளுவனுக்கு காவிச் சாயமா? என்று விமர்சித்துள்ள அவர், சாயாத சரித்திரத்தை காவி சாயம் என்ன செய்துவிட போகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆளுநர் மாளிகை காவி நிறத்தில் திருவள்ளுவர் படத்தை வெளியிட்டதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
Similar News
News April 3, 2026
4 தொகுதிகளில் பாஜகவுடன் மோதும் காங்.,

தொகுதிகளில் 4 தொகுதிகளில் காங் – பாஜக இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. விளவங்கோடு – பாஜகவின் விஜயதரணியை எதிர்த்து காங்.,சின் டி.டி.பிரவீன், உதகை – பாஜகவின் போஜராஜனை எதிர்த்து காங்., வேட்பாளர் ராமச்சந்திரன், அறந்தாங்கி – பாஜகவின் கவிதா ஸ்ரீகாந்தை எதிர்த்து காங்.,சின் டி.ராமச்சந்திரன், குளச்சல் – காங்கிரஸின் தாரகை கத்பர்ட்டை எதிர்த்து பாஜகவின் டி.சிவகுமார் போட்டியிடுகின்றனர். <<-se>>#TNElection2026<<>>
News April 3, 2026
பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்பு கம்பியால்.. கொடூரம்

பெண்ணை பலாத்காரம் செய்து பிறப்புறுப்பில் இரும்பு கம்பியால் தாக்கிய கொடுமை ஆந்திராவில் நடந்துள்ளது. அரசு ஊழியரான அப்பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர், கத்தி முனையில் மிரட்டி அப்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தனக்கு HIV தொற்று இருப்பதாக கூறியதால் ஆத்திரமடைந்த அந்த கொடூரன், அப்பெண்ணின் பிறப்பிறுப்பில் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இந்த மனித மிருகத்தை என்ன செய்வது?
News April 3, 2026
₹931 கோடி போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்

அமெரிக்காவின் மற்றொரு F-35 ரக போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இதற்கு அமெரிக்கா இன்னும் பதிலளிக்கவில்லை. மார்ச் 19 அன்றும் ஒரு F-35 ரக விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்தது. ஆனால், இதற்கு US மறுப்பு தெரிவித்தது. இந்த போர் விமானத்தின் மதிப்பு சுமார் ₹950 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.


