News May 24, 2024

பாஜ தரம் தாழ்ந்திருப்பது வருத்தமளிக்கிறது

image

முதல்வர் நவீன் பட்நாயக்கின் உத்திகளால் ஒடிஷா பாஜ தலைவர்கள் தேர்தல் பிரசாரத்துக்கு கூட வர முடியாத சூழல் உள்ளதாக வி.கே.பாண்டியன் தெரிவித்தார். இதனால் அவர்களை ஆதரித்து பேச தேசியத் தலைவர்கள் இங்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், ஓட்டுகளைப் பெற முதல்வரை இழிவுபடுத்தும் நிலைக்கு பாஜக தரம் தாழ்ந்திருப்பது வருத்தமளிப்பதாகக் கூறினார். ஒடிஷா மக்கள் இவர்களை மன்னிக்கவோ, மறக்கவோ மாட்டார்கள் என்றார்.

Similar News

News September 5, 2025

BREAKING: இபிஎஸ்-க்கு செங்கோட்டையன் வார்னிங்

image

கட்சியில் இருந்து விலகியவர்களை(OPS, சசிகலா, TTV) மீண்டும் இணைக்க EPS-க்கு செங்கோட்டையன் கெடு விதித்துள்ளார். 2026 தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுகவாக தேர்தலில் சந்தித்தால்தான் வெற்றி பெற முடியும் என கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கருதுவதாகவும் கூறியுள்ளார். 10 நாள்களுக்குள் நல்ல முடிவை எடுக்காவிட்டால் ஒத்த கருத்துடைய தலைவர்களை ஒன்றிணைத்து, ஒருங்கிணைப்பு பணியை செய்வோம் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

News September 5, 2025

BIG BREAKING: முடிவை அறிவித்தார் செங்கோட்டையன்

image

2017-க்கு பிறகு அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்த அதிமுக, கட்சியில் இருந்து வெளியில் சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கட்சியில் இருந்து விலகியவர்கள், எவ்வித நிபந்தனைகளும் இன்றி கட்சியில் இணைய தயாராக இருப்பதாகவும், விரைந்து முடிவுகளை எடுக்கவில்லை என்றால் ஒன்றிணைக்கும் நாங்கள் இணைந்து செய்வோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News September 5, 2025

EPS பெயரை கூற மறுத்த செங்கோட்டையன்

image

அதிமுகவில் இருந்து யாரேனும் விலகினால் அவர்களது வீடு தேடிச் சென்று MGR சமாதானம் செய்வார் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 2017-ல் கட்சிக்கு கடுமையான சோதனைகள் ஏற்பட்டபோது, முன்னாள் முதல்வர், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுத்தோம் என EPS பெயரை கூறாமல் தனது கருத்தை கூறினார். அதிமுக உடையக் கூடாது என்பதற்காக தனக்கு வந்த வாய்ப்புகளை எல்லாம் தியாகம் செய்ததாக வேதனையுடன் கூறியுள்ளார்.

error: Content is protected !!